GOAT Vijayakanth: கேப்டனுக்கு வந்த சோதனையா இது..? கோட் படத்தின் விஜயகாந்த் AI வெர்ஷன் இதுதானா!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் விஜயகாந்த் ஏஐ வெர்ஷனில் நடித்துள்ள நிலையில், அதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Sep 5, 2024 - 12:40
Sep 5, 2024 - 17:36
 0
GOAT Vijayakanth: கேப்டனுக்கு வந்த சோதனையா இது..? கோட் படத்தின் விஜயகாந்த் AI வெர்ஷன் இதுதானா!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், த்ரிஷா இருவரும் கேமியோவாக நடித்துள்ளனர். அதேபோல், அஜித், கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் ரெஃபரன்ஸும் கோட் படத்தில் இடம்பெற்றுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கோட் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தை ஏஐ வெர்ஷனில் நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு. தளபதி விஜய் கேரியரில் அவரது வளர்ச்சிக்கு பெரிய அளவில் சப்போர்ட் செய்தவர் விஜயகாந்த் தான் என்பது அனைவரும் அறிந்ததே.

அதாவது விஜயகாந்துக்கு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தவர் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர். அதனால் விஜய் சினிமாவில் அறிமுகமான போது அவருக்கு சப்போர்ட் செய்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்திடம் கேட்டிருந்தார் எஸ்.ஏ.சி. அப்படி உருவான திரைப்படம் தான் செந்தூரபாண்டி. 1993ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விஜய்க்கு ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் தொடர்ந்து பலவிதங்களில் சப்போர்ட் செய்து வந்தார். 

இதனால் விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே பெரிய மரியாதை இருந்து வந்தது. விஜயகாந்த் மறைவுக்கும் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அதேபோல், சில தினங்களுக்கு முன்பும் விஜயகாந்தின் இல்லம் சென்றிருந்த விஜய், அவரது குடும்பத்தினருடன் சிறிதுநேரம் கலந்துரையாடினார். அப்போது கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜியில் பயன்படுத்த அனுமதி கொடுத்ததற்கு, பிரேமலதாவிடம் விஜய் நன்றி தெரிவித்ததாக சொல்லப்பட்டது. இதனால் கோட் படத்தில் விஜயகாந்த் வரும் சீன் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

மேலும் படிக்க - ரகசியமாக கோட் படம் பார்த்த விஜய்... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில், இன்று கோட் திரைப்படம் வெளியாகிவிட்ட நிலையில், விஜயகாந்த் என்ட்ரியாகும் காட்சியை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில் விஜயகாந்த் போல ஃபேஸ் மாஸ்க் அணிந்து வருகிறார் விஜய். ஆக்ஷன் காட்சி ஒன்றில் விஜயகாந்த் கெட்டப்பில் என்ட்ரியாகும் விஜய், பின்னர் தனது ஃபேஸ் மாஸ்க்கை ரிமூவ் செய்வதாக முடிகிறது. இது விஜய், விஜயகாந்த் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

அதாவது கேப்டன் விஜயகாந்தின் ஏஐ லுக் இன்னும் நன்றாக செய்திருக்கலாம். அதிலும் விஜயகாந்த் கெட்டப்பில் விஜய் வருவதெல்லாம் எதுவும் குறியீடா அல்லது கேப்டனின் அரசியல் வாரிசாக விஜய் தன்னை சொல்ல வருகிறா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், விஜயகாந்துக்கும் விஜய்க்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு விஜயகாந்தின் ஏஐ லுக் ரசிக்கும்படி இல்லையென்றும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow