Siddharth Wedding in Wanaparthy : 400 ஆண்டுகள் பழமையான கோயிலில் அதிதி - சித்தார்த் திருமணம்..... வெட்கத்தில் சிவந்த அதிதி!
Siddharth Wedding in Wanaparthy : நடிகை அதிதி ராவ் ஹைதாரி மற்றும் நடிகர் சித்தார்த்தின் திருமணம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
Siddharth Wedding in Wanaparthy : நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். 2021ம் ஆண்டு வெளியான ‘மஹா சமுத்திரம்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. முதலில் நல்ல நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையே நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இருவரும் காதலித்து வந்ததை உறுதி செய்தது.
இதையடுத்து பல்வேறு திரை நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்களில் இருவரும் கைக்கோர்த்து ஜோடியாக சென்று தாங்கள் காதலிப்பதை வெளிப்படையாகக் கூறினர். சித்தார்த் - அதிதி ஜோடி திரைத்துறையின் கியூட்டஸ்ட் கப்பிளாக வலம் வந்தனர்.
இந்நிலையில் ஒரு நாள் அதிதி மற்றும் சித்தார்த் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரது கைகளிலும் மோதிரங்கள் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு நிச்சயதார்த்தம் முடிந்தது என தெரிவித்திருந்தனர். இதையடுத்து இருவரும் ரகசியமாக நிச்சயம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அண்மையில் பேசிய நடிகை அதிதி ராவ் ஹைதாரி, “நாங்கள் ரகசியமாக நிச்சயம் செய்துகொள்ளவில்லை. எங்கள் இருவரது குடும்பத்தினருடன் மட்டும் பிரைவேட்டாக வனபர்த்தி ஸ்ரீரங்கபுரம் கோயிலில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டோம். ரகசியமாக செய்து கொண்டதற்கும் குடும்பத்தினருடன் பிரைவேட்டாக செய்துகொண்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நடிகர், நடிகைகள் அவர்களது வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் மீடியா முன்பு காண்பிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. எங்களுக்கும் தனிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சித்தார்த் தன்னிடம் எப்படி ப்ரொபோஸ் செய்தார் என்பதையும் பகிர்ந்து கொண்டார். அதில், “எனக்கு எனது பாட்டி என்றால் மிகவும் பிடிக்கும். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகினார். என் பாட்டி ஐதராபாத்தில் ஒரு பள்ளி தொடங்கினார். அவரது நியாபகம் எனக்கு வரும்போதெல்லாம் அந்த பள்ளிக்கு சென்று சிறிது நேரம் அங்கு நேரம் செலவழிப்பேன். அப்படி ஒரு முறை நான் சென்றிருந்தபோது சித்தார்த் அங்கு வந்தார். என் முன் முட்டி போட்டு, “அதிதி.. என்னைக் கொஞ்சம் பார்..” எனக்கூறி அவரது காதலை சொன்னார். அந்த நொடியே நான் அவரது காதலை ஏற்றுக்கொண்டேன். இது என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும்” என்றார்.
மேலும் படிக்க: ரஜினி – லோகேஷ் கூட்டணியில் டான் அவதாரம்... நாகர்ஜுனா சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதையடுத்து திருமணம் குறித்து பேசிய அவர், “எனக்கும் சித்தார்த்துக்கும் வனபர்த்தியில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமண நாள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” எனக் கூறினார்.
What's Your Reaction?