Biriyani Man vs Irfan: தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேன்... வச்சி செய்த A2D... நடந்தது என்ன?

யூடியூபர்கள் பிரியாணி மேன், இர்ஃபான் இடையேயான பஞ்சாயத்து நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Jul 29, 2024 - 21:40
 0
Biriyani Man vs Irfan: தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேன்... வச்சி செய்த A2D... நடந்தது என்ன?
Biriyani Man VS Irfan

சென்னை: சோஷியல் மீடியாவை பொறுத்தவரை தினம் தினம் ஒவ்வொருவர் டிரெண்டாகி வருகின்றனர். சினிமா ஹீரோக்கள் போல இவர்களுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது தான் ரொம்பவே வேடிக்கையாக உள்ளது. இப்படி பிரபலமானவர்கள் லட்சக் கணக்கில் வருமானம் ஈட்டுவதோடு சொகுசு பங்களா, ஃபாரின் கார் என ஏகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் விழுந்து விழுந்து வீடியோ போட்டும், இன்ஸ்டா ரீல்ஸ் செய்தும் சிலரால் டிரெண்டிங்கில் வரவே முடியாது. அதற்காக அவர்கள் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம், ஏற்கனவே டிரெண்டிங்கில் உள்ளவர்களை வம்பிழுப்பது. சமீபத்தில் இந்த ஐடியா அண்மை காலமாக பல சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களிடம் பார்க்க முடிகிறது. 

அப்படி டிரெண்டிங்கான இர்பானையும் டெய்லர் அக்கா என்பவரையும் வம்பிழுத்து நெகட்டிவ் பப்ளிசிட்டியை தேடி வருகிறார் பிரியாணி மேன் என்ற யூடியுபர். இர்பான் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஃபுட் ரிவீவ்யூ கொடுத்தே உலகம் முழுவதும் பிரபலமானார். இவரை டார்க்கெட் செய்து பிரியாணி மேன் வெளியிடும் வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிரியாணி மேன் என்பவரின் நிஜப் பெயர் ரபி. Dark வீடியோக்கள் என்ற பெயரில் abusive-ஆன கண்டெண்டுகளை கொடுத்து வன்மத்தை கொட்டி வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

மற்ற யூடியுபர்களும் abusive-ஆக பேசி வீடியோ வெளியிடுவது வழக்கமாக உள்ளது. ஆனாலும், பிரியாணி மேன் அளவுக்கு அதிகமாக பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பிரபல யூடியூபர் இர்பானை வம்பிழுத்திருந்தார் பிரியாணி மேன். ஓராண்டுகளுக்கு முன்பு இர்பானின் மச்சான் ஏற்படுத்திய கார் விபத்தை பற்றியும் விமர்சனம் செய்திருந்தார். அதாவது, அது இர்பான் செய்த விபத்து தான் என பிரியாணி மேன் கூற, தன் மச்சான் தான் கார் ஓட்டினார் என்ற ஆதாரங்களை காட்டி பதிலடி கொடுத்தார் இர்பான். இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், டெய்லர் அக்காவை வம்பிழுத்து மீண்டும் பப்ளிசிட்டி தேட முயன்றார் பிரியாணி மேன். 

டெய்லர் அக்கா வெளியிடும் ப்ளவுஸ் வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகவும், மோசடி செய்வதாகவும் புகார்களை வைத்திருந்தார். ஆனால் டெய்லர் அக்கா இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தான் உண்டு, தன் வேலையுண்டு என இதுவும் கடந்து போகும் மோடில் உள்ளார். இந்நிலையில் தான், ஏ2டி என்ற யூடியுபர், டெய்லர் அக்கா குறித்து பிரியாணி மேன் வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலவரம் பற்றி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் டெய்லர் அக்கா மீது பிரியாணி மேன் வைத்த புகார்கள் அனைத்தும் பொய்யானது என்று ஆதாரங்களுடன் நிரூபித்திருந்தார். 

மேலும் படிக்க - தனுஷுக்கு செக்... ஓடிடி ரிலீஸுக்கு புது கண்டிஷன்!

இதனைத் தொடர்ந்து, பிரியாணி மேன் மீது அதிகளவிலான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கடுப்பான பிரியாணி மேன், லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவரது தாய் கதவை தட்டி தடுத்துள்ளார். இதனை லைவில் பார்த்த நெட்டிசன்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், இதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்டுகள், அனுதாபம் சம்பாதிக்கத்தான் பிரியாணி மேன் இப்படி செய்துள்ளார் என்று விமர்சித்து வருகின்றனர். 

தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டால் அல்லது தற்கொலை எண்ணம் வந்தால் அதிலிருந்து விடுபட தமிழக அரசின் உதவி மையம் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-2464 0050 ஆகிய எண்களை தொடர்புகொள்ளவும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow