குத்துச்சண்டை போட்டி.. நெட்பிளிக்ஸ் சேவை செயலிழப்பு.. ரசிகர்கள் புகார்..!
முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் யூடியூபர் ஜேக் பால் இடையிலான குத்துச்சண்டை போட்டி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங்கான நிலையில், திடீரென நெட்பிளிக்ஸ் சேவையில் இடையூறு ஏற்பட்டது.
முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசன் (58), யூடியூபர் ஜேக்பால் (27) மோதும் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி அமெரிக்க நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில் ஆர்லிங்டன் ‘ஏடி அண்ட் டி’ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த போட்டி பிரபல ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், நெட்பிளிக்ஸ் தளத்தின் லைவ் ஸ்ட்ரீமிங் சேவை திடீரென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பாதிக்கப்பட்டது.
செயலிழப்புகளைக் கண்காணிக்கும் நம்பகமான ஆன்லைன் தளமான Downdetector.com மூலம் சேவை குறுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து நெட்ஃபிலிக்ஸ் தளம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,
நெட்ஃபிலிக்ஸ் சேவை பாதிக்கப்பட்டதால், எக்ஸ் தளத்தில் #NetflixCrash என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
காலை 9:17 மணிக்கு இந்தியாவில் 1,310 பேருக்கு இடையூறு ஏற்பட்டதாக புகார்கள் பதிவாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் சேவை பாதிக்கப்பட்டதால், மைடைசன் மற்றும் ஜேக்பால் குத்துச்சண்டை போட்டியைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
What's Your Reaction?