Geetha Jeevan : டீன் ஏஜ் பெண்களே காதல்ல சிக்காதீங்க.. நகை, டிரஸ்சுக்கு அடிமையாகாதீங்க.. கீதாஜீவன் அட்வைஸ்

Minister Geetha Jeevan Advice to Girls : வளர் இளம் பெண்கள் காதலில் சிக்கக் கூடாது என்று பள்ளி மாணவிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். அதேபோல மாணவிகள் தங்களை எளிதில் அடிமையாக்கும் ஆடை ஆபரணங்களுக்கு அடிமையாகக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Aug 6, 2024 - 14:09
Aug 6, 2024 - 14:47
 0
Geetha Jeevan : டீன் ஏஜ் பெண்களே காதல்ல சிக்காதீங்க.. நகை, டிரஸ்சுக்கு அடிமையாகாதீங்க.. கீதாஜீவன் அட்வைஸ்
Minister Geetha Jeevan Advice to Girls

Minister Geetha Jeevan Advice to Girls : நாடகக் காதல் என்று பலரும் தற்போது கருத்து கூறி வரும் நிலையில் இளம் பெண்கள் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு மிக முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன். காதல் வலையில் விழக்கூடாது என்றும் நகை, ஆடைகளுக்கும் பெண்கள் அடிமையாகக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார் கீதாஜீவன்.

சூளைமேடு ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு, பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அமைச்சர் கீதாஞ்சலி(Minister Geetha Jeevan) கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர், நாமும் ஒரு காலம்   முதியோர்களாக மாறுவோம் என்பதை உணர்ந்து முதியவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 டீன் ஏஜ் வயதில் பெண்களுக்கு எதிர்ப்பாலினம் மீது ஈர்ப்பு ஏற்படு அத்தகைய ஈர்ப்பு அந்த வயதில்  சகஜம் என்பதை உணர்ந்து காதல் என்கின்ற வலையில் மாணவிகள் சிக்க கூடாது என தெரிவித்தார். 19 வயதை கடந்த பின்னர் தான்  காதல் குறித்தும் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்வது குறித்தும் ஒரு தெளிவான முடிவெடுக்க முடியும் என்றும் கூறினார் கீதா ஜீவன். 

அதேபோல மாணவிகள் தங்களை எளிதில் அடிமையாக்கும் ஆடை ஆபரணங்களுக்கு அடிமையாகக் கூடாது என மாணவிகளை  கேட்டுக்கொண்ட அமைச்சர் நல்ல ஆடைகளை அணிய வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும் மாறாக அவற்றுக்கு அடிமையாகக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். 

1098 என்கிற உதவி எண்ணிற்கு குழந்தை திருமணங்கள் குறித்த புகார்கள் வருகின்றன அவை பெறப்பட்டவுடன் உடனடியாக குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், நான் அரசியலில் வந்த உடன் எனது பிள்ளைகளை கவனிக்க மறந்து விட்டேன் இருப்பினும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் என் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். நான் அரசியலில் இந்த நிலையை அடைவதற்கு எனது குடும்பமும் ஒரு முக்கிய காரணம் என்று கூறினார். 

பாரதியார் பிறந்த பூமி எங்க பூமி, எங்கள் ஊரில் பெண்கள் அதிகளவில் படித்து வருகிறார்கள், அப்போது இருந்து இப்ப வரைக்கும் பெண்கள் ஓரம்கட்ட படுகிறார்கள், எனக்கு கிடைத்த வாய்ப்பால் முன்னேறி வருகிறேன். லவ் பண்ணிட்டு ஏமாத்துறான் என்று தெரியும் பொழுது அவனை நினைத்துக் கவலைப்படாமல் அவனைக் கழட்டிவிட வேண்டும். உங்கள் வாழ்வில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow