Crime: மசாஜ் செய்ய மறுத்த தந்தை... அடித்தே கொலை செய்த மகன்!

நாக்பூரில் மசாஜ் செய்ய மறுத்ததால் 62 வயதான தனது தந்தையை, மகன் மிதித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 19, 2024 - 17:39
Aug 19, 2024 - 17:42
 0
Crime: மசாஜ் செய்ய மறுத்த தந்தை... அடித்தே கொலை செய்த மகன்!
மசாஜ் செய்ய மறுத்த தந்தையை அடித்து கொன்ற மகன்

நாக்பூரில் வசித்து வந்தவர் 62 வயதான டட்டாத்ரேயா ஷெண்டே. இவருக்கு பிரணவ், குஷால் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரில் இளைய மகனாக இருக்கும் குஷாலின் வயது 32. மேலும் அவர் பல குற்றப்பின்னணிகளை கொண்டவர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், குஷால் மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சிறிது அசதியாக இருந்ததால் தனது பாதத்தை மசாஜ் செய்யும் படி, அவரது 62 வயதான தந்தையிடம் கேட்டுள்ளார். குஷாலின் இந்த கோரிக்கையை மறுத்திருக்கிறார் டட்டாத்ரேயா. இதனால் ஆத்திரமடைந்த குஷால், தந்தை முதியவர் என்றும் பாராமல் அவரது மார்பு, வயிறு, தலை உள்ளிட்ட பகுதிகளில் எட்டி மிதித்துள்ளார்.  

இவரின் இந்த வெறிச்செயலை பிரணவ் தடுக்க முயன்றதால், அவரையும் கொலை செய்வேன் என குஷால் மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார் பிரணவ். தந்தையை காப்பாற்ற இவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றது. பிரணவ் வீட்டிற்குச் சென்ற பார்த்த போது அவரது தந்தை சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனயடுத்து அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், குஷாலை கைது செய்துள்ளனர். வயது முதிர்ந்த தந்தையை மகனே அடித்து கொலை செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மதுவால் நடக்கும் குற்றங்கள் ஏராளம். குடும்ப வன்முறை, சாலை விபத்துகள், நிதி நெருக்கடி இப்படி பல விஷயங்கள் மதுவால் நடைபெறுகிறது. 2020ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே  ஆகிய 4 மாதங்களில் மட்டும் இந்தியாவில் குடும்ப வன்முறை 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத் தரவு காட்டுகிறது. எனவே மதுவால் தந்தையை மகனே கொலை செய்யும் வெறிச்செயல்கள் நடந்து வருவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow