தலைவிரித்தாடும் நிபா வைரஸ் தொற்று.. கேரளாவில் மீண்டும் 2 பேர் பாதிப்பு!

கேரளாவில் மீண்டும் 2 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Sep 23, 2024 - 06:52
 0
தலைவிரித்தாடும் நிபா வைரஸ் தொற்று.. கேரளாவில் மீண்டும் 2 பேர் பாதிப்பு!
நிபா வைரஸ் தொற்று.. கேரளாவில் மீண்டும் 2 பேர் பாதிப்பு!

கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் என்ற கொடிய தொற்று நோய் கடுமையாகப் பரவியது. வவ்வால்கள் மூலம் பரவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தை சேர்ந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து சற்று அடங்கியிருந்த இந்த வைரஸ் பரவல் மீண்டும் 2021ம் ஆண்டு பரவியது. இந்த முறை கேரளாவின் பழூர் கிராமம் இந்த வைரஸிற்கு இறையானது. இதனால் ஒட்டுமொத்த கிராமத்தையும் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் கேரள அரசு ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் கோழிக்கோடு மாவட்டத்தில் வெடித்த இந்த நிபா வைரஸ் தொற்று மூன்று பேரின் ஊயிரைக் காவு வாங்கியது. 

இந்நிலையில் தற்போது மீண்டும் கேரளாவை ஆட்டிப்படைத்து வருகிறது நிபா வைரஸ். கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரள மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்டிருந்த இளைஞருடன் தொடர்பிலிருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருடன் தொடர்பிலிருந்த 267 பேரில், இரண்டு பேருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில், தற்போது மேலும் 2 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ், “நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பு பட்டியலில் 267 பேர் உள்ளனர். இதில் 177 பேர் முதன்மை தொடர்பு பட்டியலிலும், 90 பேர் இரண்டாம் நிலை பட்டியலிலும் உள்ளனர். இவர்களில் கடந்த 20ம் தேதி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 6 பேரின் முடிவுகளிலும் அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: இலங்கையின் 9வது அதிபராகும் அநுர குமார திசநாயக... புதிய வரலாற்று சாதனை!

தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடர்பு பட்டியலில் உள்ள 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள், மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நிபா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow