Actress Iniya : மல்லு கேர்ள்ஸ் மல்டிடெலன்ட் ஆக இருக்காங்க… பாலியல் சீண்டல் கேள்விக்கு நோ கமென்ட்ஸ்... நடிகை இனியா
Actress Iniya Interview : கேரளாவில் நிறைய புகார்கள், பழைய விஷயங்கள் பேசப்படுது, பலர் ராஜினாமா செய்றாங்க.. ஒவ்வொருத்தரும் தங்கள் பிரச்னைகளை, பாதிப்பை சொல்லிட்டு இருக்காங்க. நல்லது, கெட்டதாக பல சம்பவங்கள் நடக்குது. சோஷியல் மீடியா தாக்கம் அதிகமாக இருக்குது. அதனால எது உண்மை, எது பொய், எங்கே பிரச்னைனு யாராலும் கணிக்க முடியலை.
Actress Iniya Interview : சினிமாவில் 20வது ஆண்டை தொடுகிறார் இனியா. அதற்கு வாழ்த்து சொன்னால், ஹலோ, நான் குழந்தை நட்சத்திரமாகவே நடிக்க வந்திட்டேன். அந்த கணக்கை கூட்டிக்கழித்து பார்த்தால் 20 வரும். ஹீரோயினாக 10, 15 ஆண்டுகளாகதான் நடிச்சிட்டு இருக்கேன். இப்ப, தொழிலதிபராவும் ஆகிவிட்டேன். வெளிநாடுகளில் அதிக டான்ஸ் ஷோ பண்ணுறேன். மொத்தத்தில் சந்தோஷமாக இருக்கிறேன் என்றவரிடம், உங்க வெற்றிக்கு யார் காரணம் என்று கேட்டோம்.
அம்மா நடிகை ஆக ஆசைப்பட்டாங்க
‘‘அப்பா, அம்மாதான். என் அம்மாவுக்கு சினிமா மீது அவ்வளவு காதல், ஆசை. அந்த கால படங்களை அவ்வளவு ரசிப்பாங்க. அவங்களுக்கு நடிக்க ஆசை இருந்து இருக்கிறது. டான்ஸ், டிரெஸ், மேக்கப் எல்லாமே பிடிக்கும். அவங்களா அதை சரியாக பண்ண முடியலை. அதை என் மூலம், என் சிஸ்டர் மூலம் நிறைவேற்றினாங்க. எனக்காக ஒரு கிளாசிக்கல் டீச்சரை வீட்டுக்கு வர வெச்சு, எங்களுக்கு பரதநாட்டியம் சொல்லிக்கொடுத்தாங்க. சில சமயம் நான் டயர்ட் ஆனால் கூட எனர்ஜி கொடுப்பாங்க. நடிப்பில் என் தவறுகளை திருத்துவாங்க. சினிமா பற்றி எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவாங்க. அவ்வளவு திறமை.அவங்க நடிகை ஆகி இருந்தால் என்னை விட பெரிதாக ஜொலிச்சு இருப்பாங்க. அப்பா பக்காவான கேரள கல்ச்ரல் டிராமா ஆர்ட்டிஸ்ட். அவரும் நடிப்பை விட்டு வேறு துறைக்கு போனாரு. என் சம்பளம், பைனான்ஸ் விஷயங்களை அவரு பார்த்துகிட்டாரு. கலை உலகத்துல ஜெயிக்க வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது, உனக்கு கிடைச்சு இருக்குதுனு அவங்க சொல்லுவாங்க. என்னை பற்றி அம்மாவுக்கு தெரியாத எந்த ரகசியமும் இல்லை. அவங்க ஆசீர்வாதம் இல்லாமல் நானும் எதையும் செய்ய மாட்டேன். சமீபத்தில் கூட என் டான்ஸ் ஷோ, வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் அவங்க கலந்துகிட்டாங்க’’ என்றார்.
தமிழில்தான் அதிக படங்கள்
கோலிவுட்டில் பார்வதி, மாளவிகாமோகனன், நித்யாமேனன், நிமிஷா, ரஜிஷா, அபர்ணா பாலமுரளி என பல மலையாள ஹீரோயின்கள் கலக்குறாங்களே என்றால், ‘‘திறமைசாலிகள் எங்கும் ஜெயிப்பார்கள். கர்நாடகாவை சேர்ந்த தீபிகாபடுகோனே பாலிவுட்டில் கொடி கட்டிபறக்கிறார். நான் மலையாளியாக இருந்தாலும் தமிழில்தான் அதிக படங்கள் பண்ணியிருக்கிறேன். மல்லு கேர்ள்ஸ் கொஞ்சம் மல்டி டெலன்ட் ஆக இருக்காங்க. அவங்க உடல்வாகு, கண், கலர், நடிப்பு, டான்சி்ல் கலக்குறாங்க. அதற்கான பலன் கிடைக்கிறது. அப்புறம், மொழி பார்க்காமல், திறமைக்கு அங்கீகாரம் கொடுத்து மலையாளிகளை கொண்டாடுகிற தமிழ் ரசிகர்களுக்கும், தமிழ்திரையுலகினருக்கும் கோடி நன்றி. உண்மையை சொன்னால் மலையாளிகளுக்கு மற்ற, மாநிலங்களி்ல் நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்குது. 1960களி்ல் இருந்தே இது நடக்குது. அதுக்காக மற்ற மாநில நடிகைகள் டெ லண்ட் இல்லைனு சொல்ல முடியாது. அவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலை.’’ என்றார்.
இப்ப, இன்டஸ்ரி மாறிவிட்டது
தமிழில் பல படங்களில் ஹோம்லியாக நடிச்சு இருக்கீங்க, அந்த ஹோம்லி லுக், உங்களுக்கு பிளஸா, மைனசா? என்றால் ‘‘சிலபேருக்கு சில விஷயங்கள் செட்டாகும், சிலருக்கு செட்டாகாது. ஒரு கேரக்டரை டைரக்டர்தான் உருவாக்குகிறார். நாங்கள் அதை இன்னும் அழகாக்குகிறோம். எனக்கு பெரும்பாலாலும் எந்த காஸ்ட்யூமும் செட்டாகும்னு கேமராமேன் சொல்லுவாங்க. ஒரு நடிகை என்றால், கிராமம், மார்டன்னு அனைத்திலும் ஜொலிக்கணும்.நான் அப்படிதான் நடிச்சிட்டு இருக்கிறேன். அதுக்கு கொஞ்சம் உழைப்பு தேவை. முன்பெல்லாம் ஒரு ஹீரோயின் என்றால் டான்ஸ் தெரியணும், அழகாக இருக்கணும். நடிப்பில் கலக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. இப்ப அந்த எதிர்பார்ப்பு இல்லை. அந்த இன்டஸ்டரி மாறிவிட்டது. அப்ப, கிளாசிக்கல் மாதிரியான டான்ஸ் தெரியாவிட்டால் சினிமாவில் ஏத்துகிடமாட்டாங்க. இப்ப, அபு்படியெல்லாம் இல்லை. ஹீரோயின் என்றால் அழகாக இருக்கணும். கலராக இருப்பவர்கள்தான் ஹீரோயின் என்ற இமேஜ் மாறிவிட்டது. இப்ப ரியல் கேரக்டரில் கலர் இல்லாத, குண்டாக, உயரம் குறைவாக, பரு உள்ள, சுமாராக இருக்கிற என ரியல் லைப்பில் நாம் பார்ப்பவர்கள் சினிமாவில் கலக்குகிறார்கள். ரியல் லைப்பில் பார்ப்பவர்ளை, இப்ப ரீல் லைப்பில் காண்பிக்கிற முறை வந்துவிட்டது. இது ஆரோக்கியமான, வர வேற்க வேண்டிய விஷயம்’ என்றார்.
உடல் எடை பிரச்னை
உடல் எடை என்பது ஹீரோயின்களுக்கு பெரிய பிரச்னை? அதை இனியா சந்திச்சு இருக்கீங்களா?, ‘‘நாம கொஞ்சம் வெயிட்டாக இருந்தால், என்னாச்சுனு விசாரிப்பாங்க, ஒல்லி ஆகிவிட்டால் உடம்புக்கு என்ன பிரச்னைனு கேள்வி கேட்பாங்க. நான் கேரக்டருக்கு ஏற்ப மாறிகிடுறேன். விலங்கு வெப்சீரியல்ல கர்ப்பிணியாக நடிச்சேன். அதுக்காக 10 கிலோ எடை கூடினேன். மம்முட்டி நடித்த மாமாங்கம் படத்துல டான்சர் ஆக வந்தேன். அதுக்காக 10 கிலோ குறைத்தேன். நான் டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். அவங்க நினைப்பது மாதிரி மாறிக்கிடுறேன்’’ என்றார் .
பிடித்த 5 படங்கள்
இனியா எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும் பேவரைட் 5னு எதை சொல்வீங்க என்றால், ‘‘தமிழில் இரண்டு 1) வாகை சூடவா, 2) ஆதார். மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த ‘மாமாங்கம்’ ‘சொர்ணகடவு’, ‘பெண்களில்லா’. இதுல பெண்களில்லா படத்துக்கு சிறந்த கிர்டிக் அவார்டு கிடைத்தது. கமர்ஷியல் படங்கள், ஆர்ட் பிலிம்னு இரண்டு கலந்து நடிப்பது என் பாலிசி என்றார்.
ஓபனாக பேசலாமா
இப்போது சினிமா துறையின் தங்களுக்கு இடையேயான பாலியல் சீண்டல், பிரச்னைகளை மீடியாவில் ஓபனாக பேசுவது சரியா, சினிமா சங்கங்கள், சட்டரீதியாக விஷயங்கள் மூலம் தீர்வு காணலாமே? இதுவரை மீடூ நிகழ்வில் கூட ஒருவரும் தண்டனை பெறவில்லையே. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்றால் ‘‘நோ கமென்ட்ஸ்’’ என்று விடைபெற்றார் இனியா.
What's Your Reaction?