Actress Sharmila: அப்போதே கூட்டு பாலியல் பிரச்சினை... ஹேமா கமிட்டி அறிக்கை... பகீர் கிளப்பிய நடிகை!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில், ஹேமா கமிட்டியின் அறிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரபல நடிகை ஷர்மிளா நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து குமுதம் நியூஸ் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 2, 2024 - 13:37
Sep 3, 2024 - 10:24
 0
Actress Sharmila: அப்போதே கூட்டு பாலியல் பிரச்சினை... ஹேமா கமிட்டி அறிக்கை... பகீர் கிளப்பிய நடிகை!
பாலியல் தொல்லை குறித்து நடிகை ஷர்மிளா ஓபன் டாக்

சென்னை: மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வந்தன. முக்கியமாக பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது விஸ்வரூபம் எடுத்தது. இந்தச் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனையடுத்து நடிகைகளுக்கு நடக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்த கேரள அரசு சார்பில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இறுதியாக ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை, ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்துள்ளது.   

இதனையடுத்து மலையாள நடிகர் சங்கமான AMMA நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். AMMA அமைப்பின் தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகளும் ஹேமா கமிட்டி குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் பதவி விலகினர். இதனால் மோகன்லால் உட்பட AMMA நிர்வாகிகள் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு மோகன்லால் விளக்கம் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து பிரபல நடிகை ஷர்மிளா மனம் திறந்துள்ளார்.   
 

குமுதம் சேனலுக்கு கொடுத்துள்ள சிறப்புப் பேட்டியில், ஹேமா கமிட்டி போன்ற ஒன்று அப்போது இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு அந்த கமிட்டி ஒரு வரப்பிரசாதம் எனக் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஷர்மிளா. தமிழில் கிழக்கே வரும் பாட்டு, மனசே மெளனமா, யாதுமாகி, மகான் கணக்கு, நான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயினுக்கு அம்மா கேரக்டரில் நடித்திருந்ததும் இவர் தான். 

இந்நிலையில், நடிகை ஷர்மிளா அப்போதே கூட்டு பாலியல் பிரச்சினை இருந்ததாக கூறி பகீர் கிளப்பியுள்ளார். மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்த ஒரு படப்பிடிப்பில் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்ததாகவும், உடனடியாக அதுகுறித்து புகார் கொடுத்தேன் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதேபோல், கொரோனாவுக்கு முன்பு மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானேன். கால்ஷீட் கொடுத்து படப்பிடிப்புக்குச் சென்ற பின்னர், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என வற்புறுத்தினார்கள். 

ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டதாகவும், மற்ற மொழிகளை விட தமிழகத்தில்தான் பெண்கள், நடிகைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். யார் வேண்டுமானாலும், யாரையும் கூப்பிடலாம் என்ற மனநிலை கேரளாவில் அதிகம் இருக்கிறது. இதனால் புதுமுக நடிகைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கால்ஷீட் வாங்கும் போது அக்கா, சேச்சி என்று என்னிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு நடிக்க அழைத்துச் சென்றனர், ஆனால், அங்கே போய் அட்ஜஸ்ட்மென்ட் தேவை என்றார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விஷால், கார்த்தி ஆகியோர் வந்தபின்னர் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கேரளாவில் மோகன்லாலும் அன்பாக இருப்பார் என்றுள்ளார். 

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம் பெண்களை, நீ படுத்தால் தான் சான்ஸ் என்று கூறி சிலர் தவறு செய்திகின்றனர். நான் 58 படங்களில் ஹீரோயின் உட்பட மொத்தம் 150 படங்களில் நடித்துவிட்டேன். ஆனால், ஒரு சில படங்களில்தான் எனக்கு இந்தப் பிரச்னை வந்தது. நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சில பெண்களும் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். அங்கே தான் இப்படியான தவறுகள் நடக்கிறது. இரண்டு கையை தட்டினால்தான் சத்தம் வரும். பாலியல் புகார் விஷயத்தில் ஆண், பெண் என இரு தரப்பிலும் குறை இருக்கிறது. சிலர் ஒரு தடவைதானே என்று மனம் மாறுகிறார்கள் எனக் கூறியுள்ளார். 

மேலும் படிக்க - வாழை படத்தை பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஹேமா கமிட்டியில் சில தமிழ் நடிகைகளுக்கும் தேடிப்போய் புகார் கொடுக்கிறார்கள். விரைவி்ல் அதுகுறித்த செய்திகள் வெளியாகும் என்றார். மேலும், பாலியல் புகார்களை முறைப்படி ஆராய்ந்து, ஆதாரங்களை பார்த்து தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் சட்டரீதியாக தீர்வு கிடைக்காவிட்டாலும், புகாரில் சிக்கியவர்களின் இமேஜ் போகும் என நடிகை ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow