Coolie: ரஜினியின் கூலி படத்தில் இணைந்த மல்லுவுட் பிரபலம்... அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் மலையாள நடிகர் செளபின் சாஹிர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Aug 28, 2024 - 19:12
Aug 29, 2024 - 10:20
 0
Coolie: ரஜினியின் கூலி படத்தில் இணைந்த மல்லுவுட் பிரபலம்... அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ரஜினியின் கூலி படத்தில் இணைந்த செளபின் சாஹிர்

சென்னை: வேட்டையனை தொடர்ந்து கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ரஜினியின் கூலி படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியானது முதல், யாரெல்லாம் இந்த மூவியில் நடிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதேநேரம் கூலி படத்தின் முதல் அப்டேட்டில், இசையமைப்பாளராக அனிருத்தும், சண்டைபயிற்சி இயக்குநர்களாக அன்பறிவ் மாஸ்டர்ஸும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்பின்னர் டைட்டில் டீசர் மட்டுமே வெளியானது. 

இந்நிலையில், தற்போது கூலி படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்களின் லிஸ்ட்டை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி முதல் ஆளாக மலையாள நடிகர் செளபின் சாஹிரின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் உட்பட மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள செளபின் சாஹிர், கூலி மூலம் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார். கூலி படத்தில் தயாள் என்ற கேரக்டரில் நடிக்கும் செளபின் சாஹிரின் போஸ்டர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. இந்த போஸ்டரில் சட்டை அணியாமல் கையில் கோல்ட் வாட்ச், வாயில் பீடி என கெத்தாக அமர்ந்துள்ளார் செளபின் சாஹிர். 

கூலி டைட்டில் டீசரிலும் கோல்ட் வாட்ச்-ஐ அதிகமாக பயன்படுத்தியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதன் பின்னர் தற்போது வெளியாகியுள்ள செளபின் சாஹிர் போஸ்டரிலும் கோல்ட் வாட்ச் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செளபின் சாஹிரை தொடர்ந்து மேலும் பல நடிகர்களின் கேரக்டர்களை படக்குழு அறிவிக்கவுள்ளது. அதில், சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை ரச்சிதா ராம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஆகியோரது போஸ்டர்களும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

ரஜினியின் கூலி LCU ஜானரில் உருவாகவில்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறிவிட்டார். இதனால் கூலி படத்தின் கதை என்னவாக இருக்கும், ரஜினியின் கேரக்டர் என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்தப் படம் ரஜினி ரசிகர்களுக்கான தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. விக்ரம், லியோ படங்களைப் போல கூலியிலும் பான் இந்தியா நடிகர்களை லோகேஷ் கனகராஜ் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளதாக செளபின் சாஹிர் கூறியிருந்தார்.

மேலும் படிக்க - கோட் டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம்ன்னு தெரியுமா..?

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளதாக ஒரு விருது நிகழ்ச்சியில் பேசியிருந்தார் செளபின் சாஹிர். ஆனால், வெற்றிமாறன் படம் பற்றிய அப்டேட்டுக்கு முன்னதாக கூலியில் கமிட்டாகியுள்ளார். அதேநேரம் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் செளபின் சாஹிர் நடிக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow