GOAT FDFS: தமிழ்நாட்டில் கோட் FDFS டைம் தெரியுமா..? புக்கிங் ஆரம்பிச்சுடுச்சே... மஜாப்பா மஜாப்பா!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் காட்சி எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Sep 2, 2024 - 15:02
Sep 3, 2024 - 10:23
 0
GOAT FDFS: தமிழ்நாட்டில் கோட் FDFS டைம் தெரியுமா..? புக்கிங் ஆரம்பிச்சுடுச்சே... மஜாப்பா மஜாப்பா!
GOAT FDFS Update

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதோடு, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட மிரட்டலான நட்சத்திரக் கூட்டணியும் இப்படத்தில் இணைந்துள்ளது. அதேபோல், யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், கோட் படத்தின் முதல் காட்சி எப்போது திரையிடப்படும் என்பது தான் தமிழக ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் பெரும்பாலான பகுதிகளிலும், பெங்களூருவிலும் கோட் படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்பதால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அதேநேரம் காலை 7 மணி சிறப்புக் காட்சிக்காவது அனுமதி கிடைக்குமா என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வாங்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். 

இந்நிலையில், கோயம்புத்தூரில் உள்ள பிராட்வே சினிமாஸில் காலை 7.25 மணிக்கு கோட் முதல் காட்சிக்கான டிக்கெட் புக்கிங் ஓபனாகியுள்ளது. காலையில் 7.25 மணிக்கு முதல் காட்சியும், 7.40 மணிக்கு அடுத்த காட்சியும் திரையிடப்படும் எனத் தெரிகிறது. இந்த இரண்டு காட்சிகளுக்குமான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை பிராட்வே சினிமாஸில் மட்டுமே காலை 7.25 காட்சிக்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகியுள்ளது. மற்ற திரையரங்குகளில் காலை 9 மணி காட்சிக்கு மட்டுமே டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்களிடையே குழப்பமான சூழல் காணப்படுகிறது.

அதேநேரம், கோட் படத்தின் முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் மற்ற நகரங்களிலும், வெளிநாடுகளிலும் கோட் டிக்கெட் புக்கிங் அமோகமாக இருப்பபதாக சொல்லப்படுகிறது. பெங்களூருவில் ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் ஒரு டிக்கெட் 1300 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலையே 700 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் கோட் டிக்கெட் விலையை அதிகரிக்கக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே கோட் படத்தின் கதையை ரஜினியையும் தனுஷையும் மனதில் வைத்து எழுதியதாகவும், அதன்பின்னரே அதில் விஜய் கமிட்டானார் என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். அதேபோல், கோட் படத்தின் ஆரம்பம் முதலே தரமான சம்பவங்கள் இருக்கும் என பிரேம்ஜியும் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் கோட் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோட் வெளியாக இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதால், சீக்கிரம் முதல் காட்சி குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow