கருப்பு சட்டைக்கு சாதிய தாக்குதல்..மதிமுக மல்லை சத்யா மனக்குமுறல்.. மவுனம் கலைப்பாரா வைகோ

மங்கை சூதக மானால் கங்கையில் மூழ்கலாம் கங்கையே சூதக மானால் எங்கே மூழ்குவது என்று கேட்டுள்ள மல்லை சத்யாவிற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

Jul 13, 2024 - 16:04
 0
கருப்பு சட்டைக்கு சாதிய தாக்குதல்..மதிமுக மல்லை சத்யா மனக்குமுறல்.. மவுனம் கலைப்பாரா வைகோ
Mallai Sathya

மதிமுகவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு ஆதிக்க சாதி திமிரோடு அவதூறு பரப்பி வருகின்றனர் என்று மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா மனக்குமுறலோடு பதிவிட்டுள்ளார். இது படுத்துக் கொண்டு காரி துப்பினால் துப்பியவரின் முகத்தில் தான் வந்து விழும் என்பதை அந்த தோழருக்கு நினைவுட்டு கின்றேன்.மங்கை சூதக மானால் கங்கையில் மூழ்கலாம் கங்கையே சூதக மானால் எங்கே மூழ்குவது என்று கேட்டுள்ளார் மல்லை சத்யா. 

இது தொடர்பாக மல்லை சத்யா தனது முகநூல் பதிவில், புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம் நலம் வாழிய நலனே மேலேயுள்ளதைப் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பவர் திராவிட இயக்க கருத்தியலில் முரண்பட்டு எதிர் நிலையில் களமாடும் பாஜக நாத கட்சிக்காரர்கள் இல்லை விருதுநகர் மாவட்ட மதிமுக மாணவர் அணி அமைப்பாளர் சிவகாசி மாரிச்சாமி அவர்கள்தான் கூடுதலாக இவர் இரங்கல் தெரிவிக்க கட்சிக்காரராக சென்று இருந்தால் வெள்ளைச் சட்டை போட்டாமல் ஏன் கருப்பு சட்டை போட்டு செல்லவேண்டும் கருப்பு சட்டை இவர்களின் சாதிய கோட்வேட் என்று பதிவு இட்டு உள்ளார்.

ஆதிக்க மற்ற சமத்துவ சமுதாயம் மலர உருவான திராவிட இயக்கங்களில் ஒன்றான மதிமுக வில் இதைப் போன்ற ஆதிக்க சாதிய மனநிலை பதிவை நிச்சயமாக நான் எதிர்பார்க்கவில்லை எனவேதான் இதில் கருத்திடுகின்றேன். கடந்த ஜூலை 5 அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சிறந்த சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் சகோதரர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொடுரமான முறையில் கூலிப்படையிரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் திரு ராகுல் காந்தி தொடங்கி கட்சி வேறுபாடின்றி தலைவர் திரு வைகோ எம்பி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

அரசியல் கடந்து எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு அவரின் சமூக செயல்பாடுகள் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும்.இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களை முழுமையாக உள்வாங்கி அவர் வழியில் பவுத்தம் தழுவியவர் நூற்றுக்கணக்கான மாணவர்களை சட்டம் பயில துணை நின்று வழக்கறிஞராக உருவாக்கியவர் படிப்பிற்கு முதலிடம் கொடுக்க கூடியவர் இப்படி அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்

இப்படிப்பட்ட மனிதரை கொடுரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டனரே என்ற செய்தி அறிந்து துடித்துப் போனேன் அவரின் பூதவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பெரம்பூர் சென்று காத்திருந்தேன் ஆனால் பிற்பகல் மணி மூன்று கடந்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் உடற்கூறாய்வுக்கு பின்னும் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர் பகுஜன் சமாஜ் கட்சியினர் காலம் கரைந்து கொண்டு இருந்தது இரவுக்கு முன் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மருத்துவமனைக்கு சென்றேன் பதட்டம் காவல் துறை கெடுபிடி ஒருவழியாக மருத்துவமனை உள்ளே சென்று காவல் துறை அதிகாரிகள் மருத்துவமனை (முதல்வர்) டீன் ஆகியோரைச் சந்தித்து பேசினேன்.

பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து இரங்கல் தெரிவித்துவிட்டு வெளியே வரும் போது மே 17 இயக்கத்தின் தலைவர் தோழர் திருமுருகன் காந்தி அணுஉலை எதிர்ப்பு போராளி பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப உதயகுமார் இயக்குனர்கள் சகோதரர் ப ரஞ்சித் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் அங்கு இருந்தனர் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்று ஊடகத்தினரை சந்தித்து சகோதரர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அதை வலைதளத்தில் பதிவிட்டேன்
 
இதில் குற்றம் கண்டுபிடித்து விருதுநகர் மாவட்ட மதிமுக மாணவர் அணி அமைப்பாளர் சிவகாசி மாரிச்சாமி சாதிய வன்மத்தில் மனம் போன போக்கில் எழுதியுள்ளார். ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த இவர் மற்ற கட்சியினரைப் போன்று வெள்ளை சட்டை அணிந்து செல்லாமல் எப்படி கருப்பு சட்டை அணிந்து செல்லலாம் இது ஒரே சாதிய அடையாளம் என்று விசமத் தனத்தோடு யாரோ ஏவி  யாரையோ குளிர்விக்க இழிவு படுத்தி பதிவிட்டுள்ளார் புதிய மனுநீதிச் சோழனின் பரம்பரையைச் சேர்ந்த இவர்.

தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து நான்கு ஆண்டுகள் அந்த ஆட்சி அகற்றப் படும் வரையில் கருப்பு சட்டையை கழட்டாமல் இருந்தவன் நான் இனி இந்த அறிவு ஜீவிகளிடமே கேட்டு நான் இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் யாரை சந்திக்கலாம் யாரை சந்திக்க கூடாது என்ன மாதிரியான உடை அணியவேண்டும் எப்படிப்பட்ட உணவு உண்ண வேண்டும்  என்பதை கேட்டு நடந்து கொள்கின்றேன்.

இந்த சமுக கட்டமைப்பில் இங்கு எல்லோருக்கும் ஒரு சாதி மதம் மொழி இருக்கிறது ஒவ்வொரு சித்தாந்தத்திற்கும் கட்சிகள் அமைப்புகள் இருக்கிறது ஆனால் அதைக் கடந்து சமூக நீதி என்ற மைய நீரோட்டத்தில் திராவிட இயக்கப் போர்வாள் தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் தலைமையில் 30 ஆண்டுகளாக பயணிக்க வேண்டிய அவசியம் என்ன ஆதிக்க மற்ற சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கில் தானே நான் சிலவற்றை எளிதாக கடந்து செல்பவன் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு ஆதிக்க சாதி திமிரோடு அவதூறு பரப்பி வருகின்றனர் சிவகாசி மாரிச்சாமி போன்றவர்கள்.

இது படுத்துக் கொண்டு காரி துப்பினால் துப்பியவரின் முகத்தில் தான் வந்து விழும் என்பதை அந்த தோழருக்கு நினைவுட்டு கின்றேன். மங்கை சூதக மானால் கங்கையில் மூழ்கலாம் கங்கையே சூதக மானால் எங்கே மூழ்குவது இப்பவும் இந்தப் பதிவு பொதுவெளியில் விருதுநகர் மாவட்ட மதிமுக மாணவர் அணி அமைப்பாளர் சிவகாசி மாரிச்சாமி  சமூக வலைதளத்தில் பதிவிட்டதைப் பார்த்து என்னிடம் இதுகுறித்து பலரும் கேட்டதால் இந்த விளக்கப் பதிவு என்றும் மறுமலர்ச்சிப் பாதையில் மல்லை சி ஏ சத்யா. பல ஆண்டு காலமாக வைகோ உடன் பயணம் செய்யும் மல்லை சத்யா தனது மனக்குமுறலை முகநூல் பதிவில் கொட்டி விட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மவுனத்தை கலைப்பாரா? 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow