கந்த சஷ்டி கவசத்தில் 'சண்டாளர்' வார்த்தை இருக்கு.. இப்ப என்ன செய்வீங்க?.. சீமான் பாய்ச்சல்!

''திருமூலரும் சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தி உள்ளார். சண்டாளர் வார்த்தையை பயன்படுத்தியது மூலம் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா?'' இதேபோல் சண்டாளன் என்ற வார்த்தை பல்வேறு சினிமா பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது''

Jul 13, 2024 - 16:13
Jul 13, 2024 - 16:36
 0
கந்த சஷ்டி கவசத்தில் 'சண்டாளர்' வார்த்தை இருக்கு.. இப்ப என்ன செய்வீங்க?.. சீமான் பாய்ச்சல்!
seeman speech about dmk

சென்னை: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூர் சாட்டை துரைமுருகன், நேற்று முன்தினம் தென்காசியில் கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர் அவதூறாக பாடல் பாடியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் தென்காசி சென்று குற்றாலத்தில் குளிப்பதற்காக சென்ற அரை கைது செய்தனர். 

பின்பு சாட்டை துரைமுருகனை காவலில் வைக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''யாரோ எழுதிய, யாரோ வெளியிட்ட பாடலைதான் சாட்டை துரைமுருகன் பாடியுள்ளார். அவராகவே இந்த பாடலை உருவாக்கவில்லை. பிறகு அவர் ஏன் அவரை கைது செய்தீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து கலைஞர் கருணாநிதி குறித்த 'சண்டாளன்' என்ற சர்ச்சை பாடலை செய்தியாளர்கள் முன்பு பாடிய சீமான், 'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்' என்று போலீசுக்கு சவால் விடுத்தார்.  'சண்டாளன்' என்று உச்சரித்தன்மூலம் சீமான் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை அவமானப்படுத்தி விட்டார் என்று திமுகவினர், கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் கலைஞர் கருணாநிதியை அவதூறு செய்து விட்டார் எனக்கூறி சீமான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் இன்று பேட்டியளித்த சீமான் 'சண்டாளன்' என்று தான் கூறிய வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பதே இப்போதுதான் எனக்கு தெரியவருகிறது. இதுவரை எனக்கு தெரியாது. இதை வழக்கு மொழியாகதான் நான் பேசினேன். 

சண்டாளன் என்ற வார்த்தை கிராமப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சண்டாளன் என்ற வார்த்தையை முன்னாள் முதல்வர் கருணாநிதி அதிகம் பயன்படுத்தியுள்ளார். இந்த வார்த்தையை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிட்டுள்ளார். மேலும் கந்த சஷ்டி கவசத்தில் 'சண்டாளன்' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதவிர திருமூலரும் சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தி உள்ளார். சண்டாளர் வார்த்தையை பயன்படுத்தியது மூலம் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா?'' இதேபோல் சண்டாளன் என்ற வார்த்தை பல்வேறு சினிமா பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அதிமுக பாடலை பாடிய சாட்டை துரைமுருகனை கைது செய்தவர்கள், ஏன் அதிமுக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் திமுகவை கடுமையாக சாடிய சீமான், ''அவதூறு பேசுவதிலும், அசிங்கமாக அரசியல் பேசுவதற்கும்  ஆதித்தாய் திமுகதான். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒவ்வொரு தலைவர்களையும் அநாகரிகமின்றி பேசிய பேச்சுகள் இருக்கின்றன. 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்தும் கருணாநிதியும், திமுகவும் அவதூறாக பேசி இருக்கின்றனர். நங்கள் பேசுவது எல்லாம் அவதூறு என்றால், திமுகவில் இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் ஆகியோர் மாற்றுக் கட்சியினர் குறித்து பேசுவது என்ன?'' என்று சீமான் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow