தினம் தினம் கொலைகள்.. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு.. கோபத்தில் கொந்தளித்த குஷ்பு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அறிவாலயத்தின் நாய்களுக்கு அடியில் போய்விட்டதாக குஷ்பு சுந்தர் பதிவிட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொல்ல சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்பாக கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி சங்கர் அதே பகுதியைச் சேர்ந்த நால்வரால் கொடூரமாக வெட்டப்பட்டிருக்கிறார். இரண்டு சம்பவங்களையும் குறிப்பிட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

Jul 9, 2024 - 10:31
Jul 9, 2024 - 14:23
 0
தினம் தினம் கொலைகள்.. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு.. கோபத்தில் கொந்தளித்த குஷ்பு
Khushbu Sundar About BSP Armstrong Murder

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதே போல கடலூர் மாவட்டத்தில் பாமக நிர்வாகியை நான்கு பேர் கொடுரமாக வெட்டியதில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கட்டணம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சென்னையில் தொடங்கி நெல்லை வரை தமிழ்நாடு முழுவதும் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய கொடூர நிகழ்வுகள் குறித்தெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலைகளும், கொலைமுயற்சிகளும் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

இந்நிலையில், பா.ஜ.க தலைவியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தர் தி.மு.க அரசை கடுமையாக சாடியுள்ளார்.அவர் தனது X பக்கத்தில் கூறுகையில், "தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நாய்களாக போய்விட்டது. கள்ளச் சாராயம், போதைப் பொருள், பலாத்காரம், பட்டப்பகலில் நடக்கும் கொலைகள் வரை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குற்றம் செய்பவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், அதன் பின் அவர்கள் சுதந்திரமாக வெளியே வருகிறார்கள். 

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை முதல் பாமக நிர்வாகி கொலை வரை இது இன்னும் முடியவில்லை. முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனைகளில் மவுனம் காப்பது நீங்கள் எவ்வளவு திறமையற்றவர் என்பதை காட்டுகிறது" என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow