ThangalanTrailer: ஆஸ்கர் விருது ரெடியா..? சீயான் விக்ரமின் தங்கலான் ட்ரெய்லர் ரிலீஸ்... மஜா அப்டேட்

பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகாத நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Jul 9, 2024 - 15:41
Jul 9, 2024 - 16:20
 0
ThangalanTrailer: ஆஸ்கர் விருது ரெடியா..? சீயான் விக்ரமின் தங்கலான் ட்ரெய்லர் ரிலீஸ்... மஜா அப்டேட்
தங்கலான் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்

சென்னை: பொன்னியின் செல்வனுக்குப் பின்னர் சீயான் விக்ரம் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தங்கலான். கோலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநரான பா ரஞ்சித் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடித்துள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அட்டக் கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது என ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு விதமான கதைக் களத்தில் இயக்கியிருந்தார் பா ரஞ்சித். அதேபோல், தங்கலான் படத்தின் கதையும் உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு, பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. 

அதன்படி, தங்கலான் படத்தை கேஜிஎஃப் தங்கச் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இயக்கியுள்ளார் பா ரஞ்சித். இந்தப் படத்திற்காக சீயான் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் மாறியுள்ளார். சாதாரணமாகவே விதவிதமான கெட்டப்களில் நடிப்பதில் விக்ரமை அடித்துக்கொள்ள கோலிவுட்டில் ஆள் கிடையாது. வெரைட்டியான கெட்டப், கேரக்டர்கள் என்றாலே, உலக நாயகன் கமலுக்குப் பின்னர் இயக்குநர்களின் சாய்ஸ் சீயான் விக்ரம் தான். அதிலும் தங்கலான் திரைப்படம், விக்ரமின் சினிமா கேரியரில் அதிஉச்சமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

விக்ரம் உடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விக்ரமின் ஆக்டிங், மேக்கிங், பின்னணி இசை என அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தை ஆஸ்கர் வரை கொண்டு செல்வோம் என தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். மேலும் பல சர்வதேச விருது விழாக்களிலும் தங்கலான் படத்தை ஸ்க்ரீன் செய்ய முடிவு செய்துள்ளது படக்குழு. இதனால் ஆரம்பம் முதலே தங்கலான் படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக இருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி தங்கலான் ட்ரெய்லர் நாளை (ஜூலை 10) ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விக்ரம், இயக்குநர் பா ரஞ்சித் இயக்குநர்கள் பயங்கர எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். ஏற்கனவே வெளியான தங்கலான் கிளிம்ப்ஸ் வீடியோ, டீசர் ஆகியவை செம்ம மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கூறியிருந்தனர். அப்படி இருக்கும் போது ட்ரெய்லர் பற்றி கேட்கவே வேண்டாம். தங்கலான் ட்ரெய்லர் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியானது முதல் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

மேலும் இந்த ட்ரெய்லருடன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை கிடைத்த தகவல்களின் படி தங்கலான் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள சூர்யாவின் கங்குவா அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்தப் படமும் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. தங்கலானை தொடர்ந்து வீர தீர சூரன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் முன்பே இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சு அருண்குமார். இதுவும் விக்ரம் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow