அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

Minister Ponmudy ED Case : திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியின் 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Jul 27, 2024 - 03:00
Jul 27, 2024 - 15:43
 0
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி
அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

Minister Ponmudy ED Case : திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது அவரது மகன் கௌதம் சிகாமணி உடன் இணைந்து 5 குவாரிகள் லைசன்ஸ் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு 25.7 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 17ஆம் தேதி அமைச்சர் பொன்முடி அவரது மகன் எம்.பி கௌதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கணக்கில் காட்டப்படாத 81 லட்ச ரூபாய் பணம், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வங்கி கணக்கில் வைத்திருந்த 41 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

மேலும் இந்த சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து மூன்று முறை சம்மன் அளித்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி ஆகியோரிடையே சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதில் கௌதம சிகாமணியின் உறவினரான கே.எஸ்.ராஜா மகேந்திரனின் அசையா சொத்துக்கள் 5.74 கோடி ரூபாய் மற்றும் கௌதம் சிகாமணியின் மனைவி தொடர்பான நிறுவனம் தொடர்புடைய அசையும் சொத்துக்களும், குறிப்பாக வைப்பு நிதி மற்றும் வங்கி கணக்கில் இருக்கும் தொகை என 8.74 கோடி ரூபாய் பணமும் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow