ஹேமா கமிட்டி.. சாரி எனக்கு அது பத்தி தெரியாது.. கும்பிடு போட்ட ரஜினிகாந்த்

கேரளா திரையுலகில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து முதல்முறையாக நடிகர் ரஜினிகாந்த் மவுனம் கலைந்துள்ளார். அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Sep 1, 2024 - 15:40
Sep 2, 2024 - 10:09
 0
ஹேமா கமிட்டி.. சாரி எனக்கு அது பத்தி தெரியாது.. கும்பிடு போட்ட ரஜினிகாந்த்
rajini hema committee

கேரளா திரையுலகில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து, நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், இயக்குநர் ரஞ்சித், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். 

கேரளா நடிகர்கள் சங்கத்தின் AMMA (Association of Malayalam Movie Artists) நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.ஹேமா கமிட்டி வெளியான பிறகு, தனது கருத்தை முதல்முறையாக தெரிவித்துள்ளார் மோகன்லால். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் ஓர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. கேரளாவில் தான் இருக்கிறேன். மலையாள திரையுலகம் பாதிக்கப்படக் கூடாது என்று உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்தார். கேரள திரையுலகில் நிலவும் பாலியல் சீண்டல்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும், மலையாள திரையுலகம் இந்த சிக்கலில் இருந்து மீண்டு வர அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் மோகன்லால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மம்மூட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், ஹேமா குழு பரிந்துரைகளை நான் முழுமனதாக வரவேற்கிறேன். அதில் கூறப்பட்டுள்ள தீர்வுகளை ஆதரிக்கிறேன். சினிமாவில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இதனை அமல்படுத்த வேண்டிய தருணம் இது. இப்போது எழுப்பப்பட்டுள்ள புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிபதி ஹேமா குழு அறிக்கையின் முழு விவரம் நீதிமன்றத்திடம் உள்ளது. அதன்படி நீதிமன்றம் தண்டனைகளை தீர்மானிக்கட்டும் என்று கூறியுள்ளார் மம்முட்டி.

சினிமாவில் எந்தவொரு அதிகார மையமும் இல்லை. சினிமா அதுபோன்ற அதிகார மையங்கள் இயங்கக்கூடிய களமும் இல்லை. சட்ட சிக்கல்கள் இருந்தால் நடைமுறைக்கு உகந்த ஹேமா குழு பரிந்துரைகளை அமலுக்குக் கொண்டு வரலாம். சினிமா வாழ வேண்டும்.

அம்மா சங்கமும் அதன் தலைமையும் தான் இவ்விவகாரத்தில் முதலில் கருத்து தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே உறுப்பினரான நான் எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும். அதனாலேயே நான் இவ்வளவு நாள் இதுபற்றி பேசவில்லை என்று கூறியுள்ளார் நடிகை மம்முட்டி. இதனிடையே இன்று சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் ஹேமா கமிட்டி அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த்.. சாரி.. எனக்கு 
ஹேமா கமிட்டி பற்றி தெரியாது என பதிலளித்தார். கார் பந்தயத்திற்கு வாழ்த்துக்கள் என்று கூறி கையெடுத்து கும்பிட்டு விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow