ரஞ்சி டிராபி 2025.. சதமடித்த கருண் நாயர்..  சாம்பியன் பட்டம் வென்றது யார்?

ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதர்பா, கேரளா அணி மோதிய நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

Mar 2, 2025 - 17:36
Mar 2, 2025 - 17:38
 0
ரஞ்சி டிராபி 2025.. சதமடித்த கருண் நாயர்..  சாம்பியன் பட்டம் வென்றது யார்?
ரஞ்சி டிராபி 2025

2025-ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் பல்வேறு மாநில அணிகள் பங்கேற்றது. இதன் இறுதி போட்டி கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. நாக்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்த விதர்பா அணி சார்பில் களமிறங்கிய டேனிஷ் மல்வேர் அபாரமாக விளையாடி 153 ரன் குவித்தார்.

தொடர்ந்து, கருண் நாயர் 86 ரன் எடுக்க முதல் இன்னிங்சில் விதர்பா அணி 379 ரன் குவித்தது. கேரள அணி சார்பில் நித்திஷ், ஈடன் ஆப்பிள் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து, கேரள அணி களமிறங்கியது. இதில் ஆதித்யா 79 ரன்னும், அகமது இம்ரான் 37 ரன் எடுக்க கேப்டன் சச்சின் பேபி அபாரமாக விளையாடி 98 ரன் குவித்த நிலையில் இரண்டு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

விதர்பா அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கேரளா அணி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து வந்த வீரர்கள் தடுமாறியதால் கேரளா அணி 342 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி கேரளாவை காட்டிலும் 37 ரன் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இன்று விதர்பா அணி தங்களுடைய  இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. இதில்  கருண் நாயர் அபாரமாக விளையாடி 295 பந்துகளை எதிர் கொண்டு 135 ரன்கள் விளாசினார். டேனிஷ் மல்வேர் 73 ரன் எடுத்தார். கடைசியாக விதர்பா அணி ஒன்பது  விக்கெட்டு இழப்பிற்கு 375 ரன் எடுத்தது. கடைசி நாள் முழுவதும் விதர்பா அணி விளையாடியதால் கேரளாவிற்கு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

 இதனால் போட்டி டிராவானது. பின்னர் முதல் இன்னிங்ஸில் பெற்ற ரன் அடிப்படையில் விதர்பா அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. விதர்பா அணி இதற்கு முன்பு 2018-19 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் தற்போது மூன்றாவதாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow