IND vs NZ: மீண்டும் மீண்டுமா..? சாதனை படைத்த இந்தியா.. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு..!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸை இழந்து வரலாற்றில் புதிய சாதனையைப் படைந்துள்ளார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றது. தொடர்ந்து, இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றதால், இறுதிப்போட்டியும் துபாயில் நடைபெற்று வருகிறது.
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முதல் அணியாக தகுதிப் பெற்றது. லீக் போட்டிகளில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி, மீண்டும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. இதனால் இந்த போட்டிக்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ் தோல்வி
இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணி அளவில் டாஸ் போடப்பட்டது. இந்த சாம்பியன் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட டாஸ் வெல்லாத இந்திய அணி, இம்முறை டாஸ் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், மீண்டும், மீண்டுமா என்பது போல, இந்த நியூசிலாந்து அணிக்கு இறுதிப்போட்டியிலும் கேப்டன் ரோகித் சர்மா டாஸை இழந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து 15 முறையாக டாஸை இழந்துள்ளது. இதன் மூலம், ஒரு அணி தொடர்ந்து டாஸ் இழப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும் என்று ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர். தொடர்ந்து கிர்க்கெட் வரலாற்றில் இந்தியா படைத்துள்ள புதிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.
சமன் செய்த ரோகித்
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரையன் லாரா 1998 அக்டோபர் முதல் 1999 மே வரையிலான ஒரு நாள் போட்டிகளில் டாஸை இழந்து வந்தார். தற்போது, அந்த மோசமான சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். டாஸை இழ்ந்தாலும், போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவதால், ரோகித் டாஸ் இழப்பது அணிக்கு நல்லது என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இந்தியாவும், நியூசிலாந்து அணியும் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 119 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. அதில், இந்திய அணி அதிகபட்சமாக 61 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக இருப்பதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More:
IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?
What's Your Reaction?






