IND vs NZ: 20 ஆண்டுகால பகையை தீர்த்த இந்தியா.. நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் டிராபியை கைப்பற்றிய இந்தியா..!

சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி தனது 20 ஆண்டுகால பகையை தீர்த்த இந்தியா, 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் டிராபியை கைப்பற்றியது.

Mar 9, 2025 - 21:46
Mar 9, 2025 - 23:04
 0
IND vs NZ: 20 ஆண்டுகால பகையை தீர்த்த இந்தியா.. நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் டிராபியை கைப்பற்றிய இந்தியா..!
IND vs NZ: 20 ஆண்டுகால பகையை தீர்த்த இந்தியா.. நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் டிராபியை கைப்பற்றிய இந்தியா..!

இந்தியா வெற்றி

2025 சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தனது  25 ஆண்டுகால பகையை இந்திய அணி தீர்த்துள்ளது.  

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றது. தொடர்ந்து, இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றதால், இறுதிப்போட்டியும் துபாயில் நடைபெற்றது. 

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி குரூப் போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியை தழுவாத நிலையில், அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி நேரிடையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. குரூப் போட்டிகளில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி, மீண்டும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதிய நிலையில், 4 விக்கெட்வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  

டாஸ் வென்ற நியூசிலாந்து

சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி களமிறங்கினர். ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய நியூசிலாந்து அணியின் வில்யங் வருண் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.  அடுத்து குல்தீப் வீசிய 10 ஓவரின் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து ரச்சின் பெவிலியன் திரும்பினார் . அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி வந்தனர். கேன் வில்லியம்சன் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய டாம் லாதம் ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.  

252 ரன்கள் இலக்கு

நிதானமாக விளையாடிய கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல் விளையாடி  வந்தனர். கிளென் பிலிப்ஸ் வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் அரைசதத்தை கடந்து விளையாடினார். 46வது ஓவரில் முகமது ஷமி பந்துவீச்சில் 63 ரன்களில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டேரில் மிட்செல் அவுட் ஆனார்.    நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் களமிறங்கினார். ஆனால் 49வது ஓவரில், அவரும் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். கடையில் மைக்கேல் பிரேஸ்வெல் அரைசதத்தை கடந்து, 53 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினால், 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 251 ரன்கள் எடுத்த நிலையில், 252 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 

அதிரடி காட்டிய ரோகித்

252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, கில் ஜோடி நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாளாப்பக்கமும் சிதறவிட்டது. தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடிய வந்த கில் 50 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்த நிலையில், சாட்னர் பந்துவீச்சில், கிளென் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து வீரர்களின் பவுலிங்கில் 3 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் அடித்து, 83 பந்துகளில் 76 ரன்களை எடுத்தார். அரை சதத்தை கடந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ரச்சின் பந்து வீச்சில் டாம் லதாமிடம் கேட்ச் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். 

சேஸ் மாஸ்டர் விராட் கோலி நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கை எளிதில் எட்டுவதற்கு வழிவகுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, வந்த வேகத்திலேயே கிளம்பியது மேலும் அதிர்ச்சியை அளித்தது. விராட் கோலி, மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில், எல்பிடப்ள்யூ முறையில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். 60 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் சாட்னர் பந்துவீச்சில் ரச்சினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

கே.எல். ராகுல், ஜடேஜா ஜோடி அபாரம்

அக்சர் படேல் 40 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் ஓ ரூர்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, 18 பந்துகளில், 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஜேமிசன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.  இறுதியில் இந்தியா நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2025 சாம்பியன் டிராபி கோப்பையை  கைப்பற்றியது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow