IND vs NZ: இந்தியா அபார பந்து வீச்சு.. 251 ரன்களில் நியூசிலாந்தை சுருட்டிய இந்தியா..
துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி களமிறங்கினர். ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய நியூசிலாந்து அணியின் வில்யங் வருண் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து குல்தீப் வீசிய 10 ஓவரின் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து ரச்சின் பெவிலியன் திரும்பினார் . அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி வந்தனர். கேன் வில்லியம்சன் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய டாம் லாதம் ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
நிதானமாக விளையாடிய கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல் விளையாடி வந்தனர். கிளென் பிலிப்ஸ் வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் அரைசதத்தை கடந்து விளையாடினார். 46வது ஓவரில் முகமது ஷமி பந்துவீச்சில் 63 ரன்களில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டேரில் மிட்செல் அவுட் ஆனார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் களமிறங்கினார். ஆனால் 49வது ஓவரில், அவரும் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். கடையில் மைக்கேல் பிரேஸ்வெல் அரைசதத்தை கடந்து, 53 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினால், 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 251 ரன்கள் எடுத்த நிலையில், 252 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ள 252 ரன்களை, ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் சாம்பியன் டிராபி கோப்பையை கைப்பற்றும் முயற்ச்சியுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் வீரர்கள் 50 ஓவர்களில் நியூசிலாந்து அணியை 251 ரன்களில் சுருட்டியது போல், பேட்டிங்கிலும் நன்றாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்போடு விளையாடி வருகின்றனர்.
What's Your Reaction?






