கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் திருவிழா..முதல்போட்டியில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது RCB

கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி முதலில் விளையாடி வருகிறது. 

Mar 22, 2025 - 20:06
Mar 22, 2025 - 20:06
 0
கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் திருவிழா..முதல்போட்டியில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது RCB

ஐபிஎல் 2025  கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கோலாகலமாக தொடக்கம்

ஐபிஎல் தொடர் 18வது சீசன் இன்று கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. கொல்கத்தாவில் மழை பெய்த காரணத்தால் மேட்ச் தொடங்குமா என்று ரசிகர்கள் சந்தேகம் எழுந்தது. ஆனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் மழை நின்றது.

இதையடுத்து, திட்டமிட்டப்படி இன்று மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக மேட்ச் தொடங்கியது. முதலில் நடிகர் ஷாருக்கான் வந்து பேசினார். இதைத்தொடர்ந்து பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல்களை பாடினார். அதனைத்தொடர்ந்து பாலிவுட் நடிகை பதானி தலைமையிலான நடனக்குழுவினர் சில பாடல்களுக்கு நடனமாடினர்.இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ஆர்சிபி பந்து வீச்சு தேர்வு

பின்னர் 18வது ஐபிஎல் சீசனை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி முதலில் விளையாடி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow