தமிழ்நாடு

மதுரையில் பச்சிளம் பெண் சிசுவிற்கு நேர்ந்த சோகம்...விசாரணையை தொடங்கிய போலீஸ்

மதுரை மாநகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் பெற்ற  தாய்மார்களின் விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது.

மதுரையில் பச்சிளம் பெண் சிசுவிற்கு நேர்ந்த சோகம்...விசாரணையை தொடங்கிய போலீஸ்

மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் பெண் சிசு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் சிசுக்கொலையா?

மதுரை மாநகர் மகபூப்பாளையம் அன்சாரி நகர் 7வது  தெரு கோவில்பிள்ளை காலனி பகுதியில் சாலையை ஒட்டிய பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உடல் கிடந்துள்ளது.  இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

Read more: IPL 2025: தொடக்க ஆட்டத்தில் RCB அணியை எதிர்கொள்ளும் KKR.. எங்கு, எப்படி பார்க்கலாம்..!

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டபோது சிசு உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் பெண் சிசுவின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. பெண் சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்ட உள்ள நிலையில் பெண் சிசுக்கொலை நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து S.S காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

முதற்கட்டமாக மதுரை மாநகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் பெற்ற  தாய்மார்களின் விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று சமூக நலத்துறை மூலமாக பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளின் விவரங்கள் கேட்டறியப்பட்டு அதன் மூலமாக விசாரணை நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலேயே சட்டவிரோதமாக பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதா? என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று பெண் சிசு கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.