விளையாட்டு

காபாவில் சாதனைப்படைப்பாரா கோலி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி தனது 100வது சர்வதேச போட்டியில் விளையாடினார். இதன் மூலம், அந்த அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

காபாவில் சாதனைப்படைப்பாரா கோலி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
காபாவில் சாதனைப்படைப்பாரா கோலி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 100வது சர்வதேச போட்டியில் விராட் கோலி இன்று விளையாடி இருக்கிறார்.  இதன் மூலம், அந்த அணிக்கு எதிராக விளையாடிய அதிகமான போட்டியில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  காபா மைதானத்தில் இதற்கு முன்னர், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த போட்டியில், மீண்டும் அந்த சாதனையை தக்கவைக்க இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில், எளிதாக ரன்களை குவிக்க முடியும் என்பதால், இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 100வது சர்வதேச போட்டியில் இன்று விளையாடிய விராட் கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விராட் கோலி இதுவரை, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 28 டெஸ்ட் போட்டிகள், 49 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 T20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இன்றைய டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம், சர்வதேச அளவில் 100வது போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 110 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

மேலும், இன்றைய போட்டியில், சதம் அடிக்கும் பட்சத்தில், விராட் கோலி ஆஸ்திரேலியாவின் 5 மைதானங்களிலும் சதம் விளாசிய 3வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெறுவார். 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை ஆஸ்திரேலியாவில் உள்ள 5 மைதானங்களிலும் சுனில் கவாஸ்கர் மற்றும் அலைஸ்டர் குக் இருவரும் இதற்கு முன்னர் சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.