தமிழ்நாடு

சென்னை நீர்நிலைகளில் 10,088 மில்லியன் கன அடி நீர் இருப்பு.. நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகள் 10,088 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நீர்நிலைகளில் 10,088 மில்லியன் கன அடி நீர் இருப்பு.. நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
சென்னை நீர்நிலைகளில் 10,088 மில்லியன் கன அடி நீர் இருப்பு.. நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில், தற்போது 10,088 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதில் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3.231 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 3114 மில்லியன் கன அடியாக உள்ளது.  ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 10,300 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 16,517 கன அடியாகவும் உள்ளது. அதேபோல் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2,956 மில்லியன் கன அடியாக உள்ளது, ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 709 கன அடியாகவும்,  நீர் வெளியேற்றம் 709 கன அடியாகவும் உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 3,366 மில்லியன் கன அடியாக உள்ளது, நீர் வரத்து வினாடிக்கு 3250 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 4632 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது‌. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 0.301 மில்லியன் கன அடியாக உள்ளது. 

நீர் வரத்தும் வினாடிக்கு 232 கன அடியாகவும், நீர் வெளியேற்றமும் இல்லை. கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 351 மில்லியன் கன அடியாக உள்ளது.  

ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 300 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 15 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது‌. மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மி.கன அடியில் தற்போது 10,088 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.