Meiyazhagan Box office: ஏறுமுகத்தில் மெய்யழகன் வசூல்... இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!
கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் கலெக்ஷன் முதல்நாளை விட இரண்டாவது நாளில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: தொடர்ந்து ஆக்ஷன் ஜானர் படங்களில் நடித்து வந்த கார்த்தி, மெய்யழகன் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார். கார்த்தி கரியரில் மெய்யழகன் முக்கியமான படமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 96 பட பிரபலம் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன், ஃபீல்குட் மூவியாக உருவாகியுள்ளது. மெலோ ட்ராமா ஸ்டைலில் எமோஷனலான படம் எனவும் மெய்யழகனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
மெய்யழகன் கதை படி, சொத்துப் பிரச்சினையால் அரவிந்த் சாமியின் குடும்பம் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிறது. இதனால் பல வருடங்களாக சொந்த ஊரையும் உறவுகளையும் பிரிந்து வாழும் அரவிந்த் சாமி, தனது தங்கை ஒருவரின் திருமணத்திற்காக மீண்டும் சொந்த ஊர் செல்கிறார். அங்கே அரவிந்த் சாமியை விழுந்து விழுந்து கவனிக்கிறார் கார்த்தி. இந்த அன்புத் தொல்லை ஒருபக்கம் இருக்க, கார்த்தி யாரென்றும் தெரியாமல், அவரது பெயரையும் கேட்க முடியாமல் அரவிந்த் சாமி தடுமாறுவதும், இறுதியில் என்ன ஆனது என்பதும் தான் மெய்யழகன் கதை.
கார்த்தி – அரவிந்த் சாமி இடையேயான உரையாடல்களும், எமோஷனலான காட்சிகளும் ரசிகர்களுக்கு ஒரு நாவல் படித்த அனுபவத்தை கொடுத்துள்ளது. அதேநேரம் ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காட்சிகள் எல்லாம் கொஞ்சம் போர் ரகம் எனவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மொத்த படத்திலும் கார்த்தியும் அரவிந்த் சாமியும் மட்டுமே வருகின்றனர். அவர்களின் உரையாடலும் சில இடங்களில் நாடகம் பார்ப்பது போல இருப்பதாக நெகட்டிவாக விமர்சனம் செய்துள்ளனர்.
மெய்யழகனுக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனாலும் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சுமாராகவே உள்ளது. அதன்படி, முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருந்தது மெய்யழகன். இரண்டாவது நாளில் இன்னும் மோசமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் மெய்யழகன் திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் 8 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
கோலிவுட்டில் தற்போதுள்ள கார்த்தி தான் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருகிறார். இவரது படங்கள் பெரும்பாலும் முதல் நாளில் 15 முதல் 20 கோடி வரை கலெக்ஷன் செய்யும். ஆனால், மெய்யழகன் முதல் இரண்டு நாட்களில் மொத்தமே 8 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளது. அதேநேரம் மெய்யழகன் படத்தின் வசூல் குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






