Demonte Colony 2 BoxOffice: தங்கலானுக்கு டஃப் கொடுக்கும் டிமான்டி காலனி 2... பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிமான்டி காலனி 2ம் பாகம் கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தற்போது பார்க்கலாம்.
சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் டிமான்டி காலனி. கடந்த 2015ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அருள்நிதிக்கு விமர்சன ரீதியாக நல்ல கம்பேக் கொடுத்திருந்தது. இதனையடுத்து டிமான்டி காலனி 2ம் பாகத்தை இயக்கினார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்திலும் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, அருடன் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் 15ம் தேதி ரிலீஸான டிமான்டி காலனி 2, சீயான் விக்ரமின் தங்கலான் படத்துக்கு டஃப் கொடுத்து வருகிறது.
முதல் பாகத்தை போல டிமான்டி காலனி 2ம் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை படி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் 6ம் தேதி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன சம்பவம், அதனை அருள்நிதியும் ப்ரியா பவானி சங்கரும் தடுத்தார்களா என்பது தான் டிமான்டி காலனி 2ம் பாகத்தின் கதை. முதல் நாளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற டிமான்டி காலனி 2, அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற தொடங்கியது. இதற்கு சீயான் விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் வெளியான தங்கலான் படம் தான் காரணம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, தங்கலானுக்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் இருந்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் படம் புரியவில்லை என விமர்சனம் செய்தனர். பா ரஞ்சித்தின் வழக்கமான கமர்சியல் டச் தங்கலான் படத்தில் இல்லை எனவும், கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாகவும் கூறினர். இதனால் தங்கலான் பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் பலரும், டிமான்டி காலனி 2ம் பாகத்துக்கு டிக்கெட் புக் செய்யத் தொடங்கினர். ஒருகட்டத்தில் தங்கலான் படத்துக்கான ஸ்க்ரீன்கள் குறைக்கப்பட்டு, டிமான்டி காலனி 2-க்கு ஸ்க்ரீன்கள் அதிகமாகின. சென்னையின் பல முக்கியமான திரையரங்குகளில் டிமான்டி காலனி 2 படத்துக்கு அதிக ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டன.
மேலும் படிக்க - தங்கலான் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
இதன் காரணமாக டிமான்டி காலனி 2 பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, டிமான்டி காலனி 2 முதல் நாளில் 3.5 கோடி முதல் 5 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாளில் 4 கோடி, மூன்றாவது நாளில் 3.5 கோடி ரூபாய் வசூலித்ததுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ஸ்க்ரீன்கள் அதிகரிக்கப்பட்டதால், ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் டிமான்டி காலனி 2 வசூல் 5 கோடியை நெருங்கியுள்ளது. அதன்படி மொத்தமாக இதுவரை 15 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்தப் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. ரெட் ஜெயன்ட் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சக்சஸ் மீட்டில், அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் டிமான்டி காலனி 2 படத்துக்கு ஸ்க்ரீன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதும் படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
What's Your Reaction?