Raksha Bandhan Day: ரக்‌ஷா பந்தனின் முக்கியத்துவம்.. எந்த நேரத்தில் ராக்கி கட்டலாம்..?

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனையடுத்து சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டியும், பரிசுகள் வங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Aug 19, 2024 - 08:59
 0
Raksha Bandhan Day: ரக்‌ஷா பந்தனின் முக்கியத்துவம்.. எந்த நேரத்தில் ராக்கி கட்டலாம்..?
ரக்‌ஷா பந்தன்

சென்னை: உன் கூடவே பொறக்கணும்…உன் கூடவே பொறக்கணும்…உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே என சினிமாக்களில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் அண்ணன் தங்கை உறவு அழகானதே. இரு நண்பர்கள் கொண்டிருக்கும் புரிதல், எதிரிகளை போல சண்டை என நெருப்பும் பனியும் போல இருந்தாலும், தேவையான நேரத்தில் உடன் நிற்கும் உறவு தான் அண்ணன் தங்கை உறவு. இந்த உறவை யாராலும் பிரிக்கவே முடியாது. இப்படியான மகத்தான உறவை கொண்டாடும் தினமே ரக்‌ஷா பந்தன். சாதி, மதம் என அனைத்தையும் தாண்டி ஆண்டு தோறும் தவறாமல் அனைவரும் கொண்டாடும் ஒரு பண்டிகைகளில் ஒன்று ரக்ஷா பந்தன். 

ரக்‌ஷா பந்தன் வரலாறு: பல புராணக் கதைகளை தழுவியே கொண்டாடப்படுகிறது ரக்‌ஷா பந்தன். அதில் ஒரு கதை தான் கிருஷ்ணர் - திரௌபதியின் உறவை பற்றி பேசும் கதை. மகாபாரதத்தில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது சரியான நேரத்தில் தனது கையில் இருந்த துணியை கழற்றி கிருஷ்ணர் திரௌபதியின் மானம் காத்து, அவரை என்றும் காப்பதாக வாக்குறுதியளிப்பார். இதனையே இன்றைய காலக்கட்டத்தில் ரக்ஷா பந்தனில் சகோதரர்கள் சகோதரிகளை என்றும் காப்பேன் என வாக்களிப்பர்.

ரக்‌ஷா பந்தன் கொண்டாடும் முறை: பெரும்பாலான பண்டிகைகள் திதி அல்லது நட்சத்திரத்தின் அடிப்படையாக வைத்து கொண்டாடப்படுவது போல தான், ரக்‌ஷா பந்தனும் பண்டிகையும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டாலும், ராக்கி கட்டிவதற்கான முகூர்த்த நேரமாக மதியம் 1.32 முதல் இரவு 9.08 மணி வரை இருக்கிறது. இதற்கு இடைபட்ட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டலாம். ரக்‌ஷா பந்தன் நாளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து, இனிப்புகள் சமைப்பர். இன்னும் சில பெண்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டும் வரை விரதம் இருப்பதும் வழக்கம். பிறகு நல்ல நேரத்தில் தங்களது சகோதரர்களுக்கு ஆரத்தி எடுத்து, திலகமிட்டு, பாசத்தோடு ராக்கி கட்டி விடுவார்கள். பதிலுக்கு சகோதரிக்கு பரிசளித்து, காலம் முழுவதும் அவர்களை பத்திரமாக பாதுகாப்பேன் என சகோதரர்கள் உறுதியளிப்பார்கள். இவ்வாறே கொண்டாடப்படும் ரக்‌ஷா பந்தன்.

பரிசு: ரக்‌ஷா பந்தன் போன்ற இந்த சிறப்பான நாளில் ராக்கியை தாண்டி சகோதரர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்க நினைக்கும் பெண்கள், கீழ்காணும் இந்த பரிசுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்..

1. முதலீடு - பரிசு என்பது செலவு தான் என கருதுபவர்கள் ஒரு முதலீட்டை உங்களுடைய சகோதரர் அல்லது சகோதரிக்கு அளிக்கலாம். இது போன்ற பரிசுகள் அவர்களின் நிதிச்சுமையை குறைப்பதோடு மட்டுமன்றி அவர்களை உற்சாகப்படுத்தும்.

2. தங்கம் -  ஆண்டு ஆண்டுகளாக சிறந்த சேமிப்பாக இருந்து வருகிறது தங்கம். 2000ம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 4,400 ரூபாயாக இருந்தது. அதுவே தற்போது சுமார் 69,000 ரூபாயை தொட்டிருக்கிறது. இதனால், தங்கத்தில் சேமிப்பது என்பது சிறந்ததே. சென்னையில் இன்றைய தங்கம் விலை கிராமுக்கு  6,669  ரூபாய், சவரனுக்கு  53,352  ரூபாயாக உள்ளது. 

3. காப்பீடு - ரக்‌ஷா பந்தனுக்கு வழங்க்கப்படும் பரிசாக சகோதரர்கள் அல்லது சகோதரிகள் பெயரில் ஹெல்த் இன்சுரன்ஸ் எடுப்பது சிறந்தது. இது அவர்கள் உடல்நலம் சரியில்லாத நேரத்தில் அவர்களுக்கு கைகொடுக்கும். 

அண்ணன் - தங்கை உறவை போற்றும் சினிமா பாடல்கள்: வட இந்தியர்களை போல ராக்கி கட்டுவது, பரிசளிப்பது என ரக்‌ஷா பந்தனை கொண்டாடாமல், வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்து இந்த தினத்தை கொண்டாடுபர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே தமிழ் சினிமாவில் அட்டகாசமான பிளேலிஸ்ட் இருக்கிறது. பாச மலர்கள் படத்தில் இருந்து ‘மலர்களை போல் தங்கை’ பாடல், பாச பறவைகள் படத்தில் இருந்து ’தென்பாண்டித் தமிழே’ பாடல், என் தங்கை கல்யாணி படத்தில் இருந்து ’தட்டிப் பார்த்தேன்’ பாடல், சமுத்திரம் படத்தில் இருந்து ’அழகான சின்ன தேவதை’ பாடல், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து ‘உன் கூடவே பொறக்கணும் பாடல், சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் இருந்து, ’ஆழி சூழ்ந்த உலகிலே’ பாடல், திருப்பாச்சி படத்தில் இருந்து 'என்ன தவம் செஞ்சிப்புட்டோம்' பாடல், மேயாத மான் படத்தில் இருந்து ’தங்கச்சி’ பாடல், வேலாயுதம் படத்தில் இருந்து ‘ரத்ததின் ரத்தமே பாடல்’ என பல பாடல்கள் உள்ளன.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow