Vettaiyan: உஷாரான வேட்டையன் டீம்... அமிதாப் பச்சனுக்கு டப்பிங் கொடுக்கும் AI... இது புதுசா இருக்கே!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டைய திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கேரக்டருக்கு ஏஐ மூலம் டப்பிங் கொடுக்க படக்குழு பிளான் செய்துள்ளது.

Sep 26, 2024 - 18:04
 0
Vettaiyan: உஷாரான வேட்டையன் டீம்... அமிதாப் பச்சனுக்கு டப்பிங் கொடுக்கும் AI... இது புதுசா இருக்கே!
வேட்டையன் அப்டேட்

சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில், ரஜினிகாந்த் உட்பட வேட்டையன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் வேட்டையன் ப்ரிவியூவை படக்குழு வெளியிட்டது. அதில் அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் டப்பிங் கொடுத்திருந்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை வேட்டையனில் நடிக்க வைத்த படக்குழு, அவரது டப்பிங்கில் சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். அதாவது வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைத்துவிட்டு, அவருக்குப் பதிலாக பிரகாஷ்ராஜ்ஜை டப்பிங் கொடுக்க வைத்துள்ளனர். ஆனால், இது படத்தில் பார்க்கும் போது அமிதாப் மாதிரியே தெரியாது, பிரகாஷ்ராஜ் தான் நினைவில் வருவார் என ட்ரோல் செய்து வந்தனர்.

இதற்கு ஒரு முடிவுகட்ட நினைத்த படக்குழு, தற்போது அமிதாப் பச்சன் கேரக்டருக்கு ஏஐ மூலம் டப்பிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர். லால் சலாம் படத்தில் மறைந்த சாகுல் ஹமீது, பாம்பே பாக்யா ஆகியோரது குரல்களை ஏஐ மூலம் பயன்படுத்தி, ஒரு பாடலை உருவாக்கினார் ஏஆர் ரஹ்மான். அதேபோல், விஜய்யின் கோட் படத்தில் மறைந்த பவதாரிணியின் குரலை பயன்படுத்தி சின்ன சின்ன கண்கள் என்ற பாடலை உருவாக்கினார் யுவன் சங்கர் ராஜா. இப்போது வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஏஐ மூலம் தமிழ் டப்பிங் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இப்படத்தின் சென்சார் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அதன்படி இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்று கிடைக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்டையன் படத்துக்காக சூர்யாவின் கங்குவா ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் சிங்கிளாக களமிறங்கும் வேட்டையன் பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டுமா என கோலிவுட்டே எதிர்பார்த்து காத்திருக்கிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow