காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் போர்க்கொடி.. டக்கென்று எழுந்து சென்ற மேயர் மகாலட்சுமி

காஞ்சிபுரத்தில் எட்டு மாதங்கள் கழித்து மாமன்ற கூட்டமானது நடைபெற இருந்த நிலையில் மேயருக்கு எதிரான கவுன்சிலர்கள் மேயர் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு கூட்டத்தினை நடத்த வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

Sep 3, 2024 - 14:13
Sep 4, 2024 - 10:10
 0
காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் போர்க்கொடி.. டக்கென்று எழுந்து சென்ற மேயர் மகாலட்சுமி
kachi mayor issue

மழை விட்டும் தூறல் விடாத குறையாக காஞ்சிபுரம் மேயருக்கு திமுக கவுன்சிலர்கள் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க கோரி கவுன்சிலர்கள் தர்ணா செய்யவே, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது என்று கூறி மாமன்ற கூட்டத்தில் இருந்து மேயர் மகாலட்சுமி எழுந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது.  இந்த மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. அதில் 32 வார்டுகளில் திமுகவும், ஒரு வார்டுகள் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. மொத்தம் 33 வார்டுகளில் திமுக கூட்டணியுடன் காஞ்சிபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய நிலையில் அதிமுக ஒன்பது வார்டுகளிலும், பாமக இரண்டு வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் சுயேச்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததால், மேயர் தேர்தலில் திமுக சார்ந்த மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டமானது நடத்தப்பட்டு மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடு தீர்மானங்கள் நிறைவேற்றுவது வழக்கம். 

ஆனால் காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி யுவராஜ் பொறுப்பேற்ற சில நாட்களுக்கு உள்ளாகவே மேயருக்கு எதிராக  கவுன்சிலர்கள் போர் கொடி உயர்த்தினர். அதில் திமுகவைச் சார்ந்த கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி உயத்தினர். அமைச்சர் நேரு முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதனை ஏற்க மறுத்த கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம்  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென மனு அளித்தனர். 

கடந்த ஜூலை மாதம் 29ம் எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில்,மேயர் உட்பட நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்த அதிருப்தி கவுன்சிலர்கள்ரும் வராத காரணத்தினால் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது தோல்வி அடைந்தது 

இந்த நிலையில் மாதாந்திர மாமன்ற கூட்டமானது நடைபெறாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று எட்டு மாதங்களுக்கு கழித்து மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டமானது நடைபெற இருந்தது 

இந்த மாமன்ற கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர்,நகராட்சி ஆணையர் நரேந்திரன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர் கூட்டமானது தமிழ் தாய் வாழ்த்து உடன் துவங்கிய நிலையில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியானது எடுக்கப்பட்டது பின்னர் இக்கூட்டம் துவங்கிய நிலையில்,மேயருக்கு எதிராக போர் கொடி தூக்கிய அதிருப்தி கவுன்சிலர்கள் திமுக உட்பட எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் பெரும்பான்மையை காண்பித்து மேயர் இந்த மாமன்ற கூட்டத்தினை நடத்த வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென்று  தர்ணா போராட்டத்தில் நடத்தினர் 

இதனால் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்களும் பெரும்பான்மையுடன் தான் மேயர் இருக்கின்றார்  என்று அதிருப்தி கவுன்சர்களுடன் ஆதரவு கவுன்சிலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் மாமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் மாமன்ற கூட்டத்தில் அமர்ந்திருந்த மேயர் மகாலட்சுமி யுவராஜ்  அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது என்று கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து எழுந்து எழுந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  எட்டு மாதங்கள் கழித்து ஆரம்பித்த மாமன்ற கூட்டம் நடைபெறாமலே வாக்குவாதத்தில் முடிந்ததால் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, நெல்லையில் மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கொந்தளித்த காரணத்தால் இரண்டு மாநகராட்சி மேயர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புது மேயர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெறாமல் தலை தப்பிய காஞ்சிபுரம் மேயர் மகாலட்மி யுவராஜ் பதவி தப்புமா அல்லது முன்னாள் மேயர் லிஸ்ட்டில் இடம் பெறுவாரா மகாலட்சுமி யுவராஜ் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow