பொலிவியா பாடல் காட்சி, ஹாலிவுட் அழைப்பு, வேள்பாரி கதை: பல சீக்ரெட் சொல்கிறார் இயக்குனர் ஷங்கர்

வேள்பாரி கதைக்கு 3 பாகம் எழுதிவிட்டேன். இன்னமும் யார் என்பதை முடிவு செய்யவி்ல்லை. அஜித், சூர்யா என பலர் நடிப்பாக தகவல் வந்தாலும் நடிகர்கள் முடிவாகவில்லை.

Jul 9, 2024 - 21:42
Jul 10, 2024 - 10:20
 0
பொலிவியா பாடல் காட்சி,  ஹாலிவுட் அழைப்பு, வேள்பாரி கதை:  பல சீக்ரெட் சொல்கிறார் இயக்குனர் ஷங்கர்
Indian 2 Movie Director Shankar with Kamal Haasan

 
இந்தியன் 2 வெளியாக உள்ள நிலையில் கமல்ஹாசன், அந்நியன், வேள்பாரி, எஸ்.ஜே.சூர்யா, சிம்பு, நயன்தாரா  உட்பட பல விஷங்கள் குறித்து இயக்குனர் ஷங்கர் அளித்த பேட்டி:

‘‘இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. நயன்தாரா இருந்தார் என்று பேசப்பட்டது. அது உண்மையா என்று கேட்டால், ‘‘ஆரம்பத்தில் காஜல்அகர்வால் கேரக்டரில் நடிக்க நயன்தாராவை கேட்டோம். ஆனால், ஷெட்யூல், கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரால் முடியவில்லை. சிம்புவை எந்த கேரக்டரிலும் நடிக்க யோசிக்கவில்லை. ஆனால், சித்தார்த் கேரக்டரில் நடிக்க சிவகார்த்திகேயன் உட்பட பலரிடம் பேசினோம். எதுவும் செட்டாகவில்லை. கடைசியில் சித்தார்த் டேட் வசதியாக இருந்தது. இந்தியன் 2வில் எஸ்.ஜே.சூர்யா ரோல் வித்தியாசமானது. அவர் கேரக்டர், இந்த பார்ட்டை விட, இந்தியன் 3வில் அதிகம் இருக்கும். அவர் நிஜ கேரக்டரே வேறு. எதிலும் திருப்பதி அடையமாட்டார். ஒரு சீன் சரியா என்று யாராவது யோசித்தால், சார், அடுத்த டேக் போகலாம் என்று சொல்லிவிடுவார். அவ்வளவு அர்ப்பணிப்பு. பல டேக் எடுத்து நடிப்பார், அவர் விடவே மாட்டார். அந்த குணம் பாராட்டப்பட வேண்டும். அது நல்ல குவாலிட்டி.’என்றார்

மேலும் அவர் கூறுகையில் ‘‘எழுத்தாளர் சுஜாதா இல்லாதது எனக்கு பெரிய இழப்பு. இந்த படத்தில் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமிசரவணகுமார் என 3 பேர் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். அனைவரின் வெர்சன் வாங்கி, கடைசியில் நான் பைனல் வெர்சனை முடிவு செய்கிறேன். 2.0வில் ஜெயமோகனுடன் பணியாற்றினேன்.அவர் மகாபாரதமும் எழுதுகிறார். சயின்ஸ்பிக்சனும் எழுதுகிறார். இந்தியாவில் உள்ள பல பகுதிகளி்ல படப்பிடிப்பு நடந்தது. ஏகப்பட்ட சீன்கள் எடுத்தோம். அதை நான் மட்டுமே எடுப்பது கஷ்டம். வெளிநாட்டில் செகண்ட் யூனிட் டைரக்டர் செய்வது வழக்கம். இந்த படத்தில் என் உதவியாளர்களாக இருந்து இப்போது இயக்குனர்களாக இருக்கிற சிம்புதேவன், வசந்தபாலன், அறிவழிகன் ஆகியோர் அந்த  வொர்க் செய்தார்கள். அவர்கள் பிசியாக இருந்தாலும் , எனக்காக வந்து செகண்ட் யூனிட் டைரக்டர்களாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு நன்றி ’என்றார். 

‘‘அடுத்து ஜேம்ஸ் பாண்ட் பாணியில் படம் பண்ணுவீர்களா? வேள்பாரி படமா? வேறு படமா?’ என்று கேட்கிறார்கள். ‘‘இப்போதைக்கு முடிவாகவில்லை. இந்தியன் 2, இந்தியன் 3 , கேம்சேஞ்சர் படங்கள் ரிலீஸ் ஆகட்டும். அப்புறம், அந்த மனநிலைக்கு ஏற்ப கதையை முடிவெடுப்பேன். கே.பாலசந்தர், கமல்ஹாசன் போன்றவர்கள் ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். நான் இப்படி செய்வது முதன்முறை
கொரோனா காலத்தில் நிறைய நேரம் கிடைத்தது. அப்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை முடித்துவிட்டேன். பக்கா பிளானிங்குடன் படப்பிடிப்பு சென்றேன். ஒரு சேலஞ்ச் ஆக எடுத்து, இரண்டு படங்களை இயக்கினேன். ஒருபடம் இயக்கும் போது அந்த பட போகஸ்தான் என் மனதில் இருக்கும். அடுத்த படம் பற்றி யோசிக்க மாட்டேன். அந்நியன் படத்தின் கிளைமாக்சில் அடுத்த பாகத்துக்கான தொடக்கம் இருக்கிறது. அந்தியன் 2 வருமா? என்று கேட்டால்,  அந்த படத்தின் கதையை வேறு ஊரில் முடிக்கலமா? வேறு இடத்துக்கு சென்று அந்நியன் சென்று பிரச்னை பண்ணுகிறான் என யோசி்த்து பார்த்தேன். ஆனால், கடைசியில் அவனுக்குள் அந்நியன் இருக்கிறான் என்ற நாட் பிிடித்து இருந்தது. அது செட்டானது.பார்ட் 2 உள்நோக்கத்துடன் அந்த சீன் வைக்கலாம்
 அந்நியன் 2 வருமானு பலர் கேட்கிறார்கள். அது தெரியலை. ஏதாவது விஷயம் கிடைத்தால் அது பண்ணலாம்’’ என்கிறார். 

‘‘சரி, நீங்க மதுரை எம்பி சு.வெங்கடேசனின் வேள்பாரி கதையை எடுக்கப்போகிறீர்களா? அதுல யார் ஹீரோ’’ என்றால், ‘‘ஆரம்பத்தில் பலரும் அந்த நாவலை படிக்க சொன்னார்கள். அப்போது எனக்கு நேரம் இல்லை. கொரோனா காலத்தில் அந்த நாவலை படித்தேன். என் கற்பனை விரிந்தது. உடனே  அதை படமாக்க முடிவு செய்தேன். சு.வெங்டேசனிடம் பேசி ரைட்ஸ் வாங்கிவிட்டேன். வேள்பாரி கதைக்கு 3 பாகம் எழுதிவிட்டேன். இன்னமும் யார் என்பதை முடிவு செய்யவி்ல்லை. அஜித், சூர்யா என பலர் நடிப்பாக தகவல் வந்தாலும் நடிகர்கள் முடிவாகவில்லை. இத்தனைக்கும் சென்னை தி.நகரில் என் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் சூர்யா. அவருடன் இன்னமும்  பணியாற்றவி்ல்லை. அந்த பிசியான சமயத்தில்தான் கார்த்திக் சுப்புராஜ் சொன்னா பொலிடிக்கல் கதையை அடுத்த படமாக உருவாக்க முடிவு செய்தேன். இதுவரை நான் வெளி கதை பண்ணியது இல்லை. இப்போது முதன்முறை.’’ என்று சிரிக்கிறார். 

‘‘உங்க படங்களில் பாடல் காட்சி, குறிப்பாக அந்த லொகேசன்ஸ் பேசப்படும். இந்தியன் 2வில் அப்படி இருக்கிறதா?’’  என்று கேட்டால், ‘‘கண்டிப்பாக இருக்கிறது. பொலிவியாவில் இந்தியன் 2வுக்காக ஒரு காலண்டர் சூட் பாடலை எடுத்தோம். மிஸ் யூனிவர்ஸ் டெமி நடித்தார். பொலிவியா செல்வதே கஷ்டம். ரொம்ப துாரத்தில் இருக்கிறது. அங்கே குளிர் அதிகம், அதே சமயம் வெயிலும் இருக்கும். அதிலும் பிப்ரவரி மாதம் மட்டுமே மழை பெய்து, அங்கே கண்ணாடி மாதிரியான ஒரு நிலப்பரப்பு உருவாகும். அதுவும் பல மைல் அளவுக்கு அந்த பிரதிபலிப்பு தெரியும். அதற்காக வெயிட் செய்து அந்த அழகான பாடலை எடுத்தோம். மழை பெய்ததா என்று பலமுறை விசாரித்து,பிளான் செய்து எடுத்தோம். படப்பிடிப்பு நடக்கும்போது மழை பெய்தாலும் கஷ்டம். அங்கே படப்பிடிப்பு நடத்தியது இந்தியன் 2 மட்டுமே. இந்த படத்தில் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் உழைப்பு அதிகம். அவர் கொடுத்த செட் அருமை. நான் ஒரு லெவல் நினைத்தால், அவர் வேறு மாதிரி கொண்டு போய் இருக்கிறார். இந்தியன் 3வில் பழங்கால செட் ரொம்ப பேசப்படும். இந்தியாவி்ல் சிறந்த ஆர்ட் டைரக்டரில் முத்துராஜ் ஒருவர்’ என்கிறார்.


‘‘ஹாலிவுட்டில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா? ஆஸ்கர் விருது ஆசை இருக்கிறதா?’’ என்று கேட்டால், ‘‘எந்திரன் வந்தபோது பல ஹாலிவுட் கம்பெனிகள் அணுகியது உண்மை. ஆனால், அவர்கள் பக்கா ஸ்கிரிப்ட் கேட்டார்கள். அதுவும் ஷாட் வகையாக பிரித்து வேண்டும். என்னிடம் அப்படி ஸ்கிரிப்ட் இல்லை. அது நடக்கவில்லை. ஆஸ்கரை விட நம்ம மக்கள் கொடுக்கிற விருதே  பெரிது. மகாபாரதம் மாதிரி கதை எடுக்கவில்லையே என்று கேட்கிறார்கள். என்னிடம் வேள்பாரி ரெடியாக இருக்கிறது’’ என்று சிரித்து விடைபெறுகிறார்.

**

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow