ரிச்சா கோஷ், ஹர்மன்பிரீத் அதிரடி - 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

IND Women vs UAE Women Match Asia Cup 2024 : ஆசியக்கோப்பை கோப்பை தொடரில் ஐக்கிய அரபு எமீரக்கத்திற்கு எதிரான போட்டியில், இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Jul 21, 2024 - 21:17
Jul 22, 2024 - 10:27
 0
ரிச்சா கோஷ், ஹர்மன்பிரீத் அதிரடி - 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ரிச்சா கோஷ்

IND Women vs UAE Women Match Asia Cup 2024: 9ஆவது டி20 ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமீரகம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளும் மோதி வருகின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 108 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர், களமிறங்கிய இந்திய அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், 2ஆவது லீக் போட்டியில், இந்திய அணியும், ஐக்கிய அரபு எமீரகம் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமீரகம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 13 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஷாஃபாலி வர்மா 18 பந்துகளில் [5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 37 ரன்கள் எடுத்த நிலையில் தரணிதார்கா பந்துவீச்சில் அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா 2 ரன்களில் வெளியேற 52 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபக்கம் ஹர்மன்பிரீதி கவுர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்திவீச்சை பதம் பார்த்தார்.

ஜெமிமா ரோட்ரிஜியஸ் 14 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்த ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடினர். இதனால், இந்திய அணியின் ரன் வேகமும் உயர்ந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதேபோல், அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதற்கிடையில் ஹர்மன்பிரீத் கவுர் 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் முறையில் வெளியேறினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிச்சா கோஷ் 29 பந்துகளில் [12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] எடுத்தார்.

தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு எமீரகம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக கவிஷா 40 ரன்களும், எஷா ஒஷா 38 ரன்களும், குஷி ஷர்மா 10 ரன்களும் எடுத்தனர்.

மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ஐக்கிய அரபு எமீரக அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், ஆசியக்கோப்பை தொடரில் 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். ஜூலை 23ஆம் நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் நேபாளம் அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow