பேஸ்பால் கிரிக்கெட்டை காட்டிவிட்டார்கள் - 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சாதனை!

England vs West Indies Match Highlights : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Jul 22, 2024 - 07:14
Jul 22, 2024 - 11:30
 0
பேஸ்பால் கிரிக்கெட்டை காட்டிவிட்டார்கள் - 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சாதனை!
இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

England vs West Indies Match Highlights : இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியோடு, பிரபல நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது. அபாரமாக ஆடிய ஓலீ போப் 121 ரன்கள் எடுத்தார். பென் டக்கட் 71 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களும், எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் அல்ஷாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், கவேம் ஹோட்ஜ், கெவின் சின்கிளைர், ஜேடன் சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 457 ரன்கள் எடுத்தது. அற்புதமாக ஆடிய கவேம் ஹோட்ஜ் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர், 171 பந்துகளில் [19 பவுண்டரிகள்] 120 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக, அலிக் அதன்ஷே மற்றும் ஜோஷ்வா டா சில்வா ஆகியோர் தலா 82 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஷோகைப் பஷிர் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரை வெளியேற்றினார். கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், கட் அட்கின்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து, 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அட்டகாசமான சதத்தை விளாசினார். இது அவருக்கு 32ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் சாதனயை சமன் செய்துள்ளார். ஹாரி புரூக் பேஸ்பால் முறையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்டு 132 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ஒலீ போப் 51 ரன்கள் எடுத்தார். இதனால், இங்கிலாந்து அணி 425 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் யாருமே நிலைத்து ஆடவில்லை. இதனால், 143 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் அடித்த 47 ரன்களே அதிகபட்சமாக அமைந்தது. ஜேசன் ஹோல்டர் 37 ரன்களும், மிக்கைல் லூயிஸ் 17 ரன்களும், ஜோஷ்வா டா சில்வா 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\

இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் கட் அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்டநாயகன் விருது இங்கிலாந்து வீரர் ஓலி போப்பிற்கு வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow