முருங்கைக்கீரை சாதம்: உங்களுக்கு முடிக்கொட்டுதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!
முருங்கைக் கீரையில் சாம்பார், பொரியல், கீரை வடை, சூப் போன்றவை பெரும்பாலும் மக்களால் செய்யப்பட்டு வருகிறது. தனித்தனியாக சமைக்கும் பெண்களுக்கு எளிதாக வேலைகளை குறைக்கும் வகையில் முருங்கை கீரை சாதம் அமைந்துள்ளது. இந்த பதிவில் முருங்கை கீரை சாதம் செய்ய தேவையான பொருட்கள் குறித்தும் செய்முறை குறித்தும் காணலாம்.

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் கீரைகள் மட்டுமே இன்றியமையாத உணவாக இருக்கும். ஆனால் வளர்ந்து வரும் நாகரீக உலகம் கீரைகளை சாப்பிடுவதை மறந்து வருகின்றனர். கீரையில் பொதுவாக உடல் நலனுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது.
நம் அன்றாட வாழ்வில் தினமும் கீரையை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்த பலன் அளிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கீரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரும் நிலையில் எளிமையாக கிடைக்கும் முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சி, தோல் நோய், தலைவலி, வாய்ப்புண், பற்களின் உறுதியை பாதுகாக்கிறது. குழந்தைகளுக்கு விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் கீரை செய்து கொடுப்பது அவசியமாகிறது.
குழந்தைகளுக்கு சாப்பிடக்கூடிய வகையில் எளிமையான முறையில் கீரை சாதத்தினை லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் செய்து கொடுக்கலாம். சரி வாங்க முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை - ஒரு கப்
கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு - தேவையான அளவு
தக்காளி - 2
வெங்காயம் - 2
வர மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பிறகு கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின்னர் வரமிளகாய் போட்டு கிளறவும், அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து, அதில் தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின்னர் முருங்கைக்கீரையை போட்டு கிளறி சூடான சாதத்தை அதில் போட்டு மிக்ஸ் செய்தால் அருமையான கீரை சாதம் ரெடி..!
(வாசகர்களின் கவனத்திற்கு: உங்கள் உணவு பழக்க முறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர விரும்பினால், முதலில் உங்கள் மருத்துவரை அனுகவும், அவர்கள் தரும் ஆலோசனைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கவும்)
What's Your Reaction?






