உடற்பயிற்சி எப்போது செய்தால் பலனளிக்கும்.. எந்த வழி சிறந்தது..?

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லதா?  உணவு உட்கொண்ட பின் உடற்பயிற்சி செய்வது உடல் எடை குறைப்புக்கு உதவுமா? என்பது குறித்த விளக்கம்.

Mar 13, 2025 - 11:51
Mar 13, 2025 - 11:52
 0
உடற்பயிற்சி எப்போது செய்தால் பலனளிக்கும்.. எந்த வழி சிறந்தது..?
உடற்பயிற்சி எப்போது செய்தால் பலனளிக்கும்

உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கு பெரும் கனவாகவே இருக்கிறது.  உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்வது கூட உடல் எடையை குறைக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, நடைப்பயிற்சியானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லதா?  உணவு உட்கொண்ட பின் உடற்பயிற்சி செய்வது உடல் எடை குறைப்புக்கு உதவுமா? என்ற குழப்பம்  நிறைய பேருக்கு இருக்கிறது. சிலர் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை ஆதரிப்பார்கள். ஒரு சிலரோ உணவு உட்கொண்ட பிறகு நடப்பதை பரிந்துரைப்பார்கள். இந்த இரு வகையான நடைப்பயிற்சிக்கும் இடையேயான மாறுபாடு என்ன என்பதை பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி

காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு வெறும் வயிற்றில் நடப்பது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும். குறிப்பாக உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்தும். இவை உடல் எடை இழப்புக்கு அவசியமானவை. மேலும் வெறும் வயிற்றில் நடப்பது மனத்தெளிவை மேம்படுத்தவும் உதவும். இந்த செயல்பாடு உடல் எடை இழப்பு பயணத்தை விரைவாக்கவும் துணை புரியும்.

உணவுக்கு பின் உடற்பயிற்சி

உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதும் பல்வேறு நன்மைகளை அளிக்கும். செரிமான பாதை வழியாக உணவு செல்லும் செயல்முறையை துரிதப்படுத்தி, விரைவாக செரிமானம் நடைபெறுவதற்கு ஊக்குவிக்கும். அதனால் செரிமான ஆரோக்கியம் மேம்படும். அத்துடன் உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவிடும்.

இரு வழிகளில் எது சிறந்தது?

இந்த இருவிதமான நடைப்பயிற்சிகளுமே உடல் எடை குறைவதற்கு உதவிடுகின்றன. எனினும் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருப்பவர்களுக்கு வெறும் வயிற்றில் மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சியே சிறந்தது.

செரிமான பிரச்சனை கொண்டவர்கள் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது பலனளிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் இந்த நடைப்பயிற்சி உதவிடும்.

அதேவேளையில் தினசரி பழக்கவழக்கம், உடல் எடை அளவு, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி முறை உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொண்டும், மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தும் உங்களுக்கு பொருத்தமான நடைப்பயிற்சியை தேர்ந்தெடுப்பது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow