மாரிசெல்வராஜின் வாழை, சூரியின் கொட்டுக்காளி. இந்த வாரம் ரிலீசான 6 படங்களின் விமர்சனம்

மாரி செல்வராஜின் வாழை எப்படி இருக்கிறது? சூரி, அன்னாபென் நடித்த கொட்டுக்காளி படத்தை ரசிக்கலாமா? விமல், கருணாஸ் நடித்த போகுமிடம் வெகுதுாரமில்லை கதைக்கரு என்ன? சாலா பார்க்கலா? மீதி படங்கள் எப்படி?

Aug 23, 2024 - 19:32
Aug 24, 2024 - 10:02
 0
மாரிசெல்வராஜின் வாழை, சூரியின் கொட்டுக்காளி.  இந்த வாரம் ரிலீசான 6 படங்களின் விமர்சனம்
இந்த வார ரிலீஸ் படங்கள்

தமிழில் இந்த வாரம் (ஆகஸ்ட் 23ம் தேதி), மாரிசெல்வராஜ் இயக்கிய ‘வாழை’,  சூரி நடித்த ‘கொட்டுக்காளி’, விமல், கருணாஸ் நடித்த  ‘போகுமிடம் வெகுதுாரமில்லை’ , வெற்றி நடித்த ‘அதர்மக்தைகள்’, புதுமுகங்கள் நடித்த ‘‘சாலா’, ‘கடமை’ ஆகிய 6 படங்கள் ரிலீஸ். இந்த படங்களின் கதை என்ன?   எதை பார்க்கலாம். எதை தவிர்க்கலாம்.

வாழை(ரேட்டிங் 3.5/5)

நெல்லையில் 1999ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் பின்னணியில் உருவாகி உள்ள படம் வாழை. அந்த சம்பவத்தால் தனிப்பட்ட முறையிலும் இழப்பை சந்தித்த இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது அனுபவங்களை மனவலியுடன் உருவாக்கிய கரு இது. துாத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில்  1998ல் கதை தொடங்குகிறது. குடும்ப வறுமை காரணமாக  வாழை தார் சுமக்கும் வேலையை செய்கிறார்கள் பள்ளி மாணவன் பொன்வேல் அம்மா ஜானகியும், அக்கா திவ்யாதுரைசாமியும். படிப்பில் ஆர்வமாக இருக்கும் பொன்வேலும் லீவு நாட்களில் வாழைதார் சுமக்க வேண்டிய நிர்பந்தம். அதேசமயம் பள்ளி டீச்சரான நிகிலா விமல் மீது பொன்வேலும், அவன் நண்பன் ராகுலும் பாசமாக இருக்கிறார்கள். கூலி உயர்வு பிரச்னை காரணமாக வாழை தார் சுமக்கும் தொழிலாளர்களுக்கும், ஓனரான ஜே.எஸ்.கே சதீசுக்கும் பிரச்னை வருகிறது.  இந்த சூழ்நிலையில், ஒரு நாள் இரவில்  அந்த ஊரில் என்ன நடந்தது? பொன்வேல் அக்காவான திவ்யாதுரைசாமி, அதே ஊரில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் இளைஞரான கலையரசன் காதல் கனிந்தா என்பதை கிராமம், அங்குள்ள மக்களின் நிலை, வாழை பின்னணியில் இருக்கும் அடிமைத்தனம் என பல விஷயங்களை வாழையில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.

வாழை மரம், வாழைக்காய் சுமக்கும் தொழிலாளர்கள், அவர்கள் வாழ்வியல், போராட்டம், ஒரு பள்ளி மாணவனில் எண்ண ஓட்டம் என தன்னை பாதித்த விஷயங்களை அவ்வளவு அழகாக, அழுத்தமாக சொல்லியிக்கிறார் இயக்குனர். கடன் காரணமாக கஷ்டப்படும் குடும்பம், தொழிலாளர்கள் படும்பாடு என்பதை ஒரு பக்கமும், அரசு பள்ளியில் நடக்கும் குறும்புகள், டீச்சர், மாணவர்களுக்கு இடையேயான பாசம், கலகலப்பு ஆகியவற்றை இன்னொரு பக்கம் என்று கதை விவரிப்பது அழகு. டீச்சராக வரும் நிகிலாவிமல் நிஜ வாழ்க்கையில் நாம் பார்த்த பல டீச்சர்களை நினைவுபடுத்துகிறார். அவரின் கனிவான பேச்சு, நடிப்பு மனதில் நிற்கிறது. மாணவர்களாக வரும் பொன்வேல், ராகுல் வெ ள்ளந்தி நடிப்பு, ரஜினி, கமல் ரசிகர் சண்டை ஆகியவை சுவாரஸ்யம், அதேசமயம், பொன்வேலின் வறுமை நிறைந்த வாழ்க்கை, வாழை தார் சுமக்க மறுக்கும் பிடிவாதம், அடி உதை படுவது, பசியால் துடிப்பது ஆகியவை கலங்கவைக்கிறது. இக்கட்டான சூழலில் அவர் சோறு சாப்பிடும் சீன் அடடா. பொன்வேலுக்கு பல விருதுகள் நிச்சயம் . இவர்களை தவிர, கடனால் தவிக்கும் அம்மா ஜானகி, அக்கா திவ்யா, கலையரசனுக்கும் நல்ல கேரக்டர். 

சந்தோஷ்சிவன் இசை, பாடல்களும், தேனிஈஸ்வர் பாடல்களும் படத்தை, கதையுடன் நெருக்கமாக, பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, தீ பாடும் தென்கிழக்கு பாடல் தாளம்போட வைக்கிறது. முதற்பாதியில் வேகமாக நகரும் கதை, பிற்பாதியில் சற்றே டல் அடித்தாலும், கிளைமாக்ஸ், அதற்கு முன் நடக்கும் சம்பவங்கள் கண்களை குளமாக்குகின்றன. சில காட்சிகள் மெதுவாக நகர்வதும், சில காட்சிகள் மீண்டும், மீண்டும் வருவது போல தோன்றுவதும் மைனஸ். தனது வலியை, சினிமா மொழியில் சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ். பரியேறும்பெருமாள், கர்ணன் அளவுக்கு கமர்ஷியல் விஷயங்கள். விறுவிறுப்பு, பரபரப்பு இல்லை, நிஜ கதை என்பதால் அதை நம்மால் எதிர்பார்க்கவும் முடியவில்லை. சில குறைகள் இருந்தாலும் தமிழ்சினிமாவில் நல்ல படைப்பு வாழை

கொட்டுக்காளி(ரேட்டிங் 3/5)
***

சூரி திருமணம் செய்ய இருக்கும், அன்னாபென்னுக்கு பேய் பிடித்துவிட்டதாக நினைத்து, குல சாமி கோயிலுக்கு, அடுத்து ஒரு சாமியாரிடம் அவரை அழைத்து செல்கிறார்கள் குடும்பத்தினர். நண்பர்களுடன்  சூரி பைக்கில் செல்ல, அன்னாபென் அப்பா, அம்மா, சூரி உறவினர்கள் ஒரு ஆட்டோவில் பின்தொடர்கிறார்கள். இந்த பயணத்தில் என்ன நடக்கிறது. என்னென்ன பிரச்னைகள் வருகிறது. கடைசியில் அன்னாபென் குணம் அடைந்தாரா? சூரி திருமணம் நடந்ததா? என்பதை உலக சினிமா பாணியில், வேறுவகை சினிமா மொழியில் பி.எஸ்.வினோத்ராஜ் சொல்லும் கதை கொட்டுக்காளி.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இது வழக்கமான சினிமா அல்ல என்று தெரிந்துவிடுகிறது. காரணம் படத்தில் இசை கிடையாது,  அதனால் பின்னணி இசை, பாடல் கிடையாது. லைவ் சவுண்ட் முறை. அதனால், நாம் பைக்கில், ஆட்டோவில் செல்லும் உணர்வு ஏற்படுகிறது. முதலில் குலசாமி கோயி்ல், பின்னர் பேய் விரட்டும் சாமியாரிடம் செல்கிறார்கள் குடும்பத்தினர். அப்போது நடக்கும் உரையாடல்கள், சண்டை, சச்சரவு ஆகியவை புது உணர்வை தருகிறது. கரகரப்பான குரலில் பே சும் சூரி, முதலில் அமைதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக பாய்கிறார். ஹீரோயின் அன்னாபென் ஒரே ஒரு டயலாக் பேசுகிறார். கண்களால், உடல்மொழியால் நடிக்கிறார். உறவினர்கள் வருபவர்கள் சினிமா நடிகர்கள் மாதிரி இல்லாமல், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், நம் உறவினர்கள் போல தெரிகிறார்கள். இதெல்லாம்  பிளஸ் என்றால், இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள். என்ன பிரச்னை, ஹீரோயின் கேரக்டர் எப்படி என்பதை தெரிவதற்குள் பாதி படம் போய்விடுகிறது. கிளைமாக்சில் ஒரு சாமியாரிடம் போகிறார்கள். அவர் பேயை விரட்ட செய்யும் செயல்முறைகள் அதிர்ச்சி, சரி, அடுத்து என்ன என்று ஆர்வமானால் படத்தை டக்கென முடித்துவிடுகிறார் இயக்குனர். 

இதில் என்ன கருத்து சொல்ல வருகிறார்கள். ஹீரோயினுக்கு என்ன பிரச்னை, சூரி எப்படிப்பட்டவர், ஹீரோயின் என்ன முடிவெடுத்தார் என்பதை எளிமையாக சொல்லாதது அல்லது கடுமையான வேறுவகை பாணியில் சொன்னது மைனஸ் ஆக தெரிகிறது. வெகு ஜன படங்களை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு இந்த உலகம், குறியீடு, பார்வை பிடிபடுவது சிரமம். உலக சினிமாவை புகழ்பவர்கள், ரசிப்பவர்கள், இயக்குனர் மிஷ்கின் மாதிரியானவர்களுக்கு இந்த படம் ஆஹாஓஹோ. ஆனால், மற்றவர்களுக்கு படம் போரடிக்கும், கதை, சீன்கள் பிடிபடாது. குறிப்பாக, கிளைமாக்சில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையே உணர இயலாது. இது ஒருவகை உலகம், இது ஒருவகை சினிமா.

போகுமிடம் வெகுதுாரமில்லை(ரேட்டிங் 3.25/5)

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்த ஒரு பயணம் குறித்த கதை இது. நெல்லையை சேர்ந்த ஒரு பெரியவர் சென்னையில் விபத்தில் மரணமடைய, அவர் உடலை தனது மார்ச்சுவரி வேனில் ஏற்றிக்கொண்டு நெல்லை புறப்படுகிறார் டிரைவரான விமல். செல்லும் வழியில் தெருக்கூத்து கலைஞரான கருணாஸ் அந்த வேனில் ஏறுகிறார். இருவருக்குமான முரண், பேச்சு, சண்டை என கதை செல்கிறது. அப்போது குடும்ப பிரச்னைகள் காரணமாக, அந்த பெரியவரின் உடலை ஒரு கும்பல் கடத்த, என்ன நடக்கிறது. பெரியவர் உடலுடன் ஊர் போய் சேர்ந்தாரா விமல், அவருக்கு எந்தவகையில் உதவினார் கருணாஸ் என்பதை ஒரு மெல்லிய உணர்வுப்பூர்வமான கதை பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர்.
அன்பேசிவம் கமல், மாதவன் மாதிரி, விமலும், கருணாசும் அவ்வப்போது கருத்து ரீதியாக மோதிக்கொள்கிறார்கள். ஆனாலும், கருணாசின் உதவும் குணம், அவரின் செயல்களால் அந்த பயணம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் உடல் காணாமல் போக, இருவரும் தவிப்பதும், அடுத்து நடக்கும் சம்பவங்களும் கதையின் ஹைலைட். சென்னை பாஷை நடிப்பது, கருணாஸ் சேஷ்டைகளால் தவிப்பது, கிளைமாக்சில் உருகுவது என வருகிறார் விமல். அதேசமயம், கதையின் நாயகன் போல தெருக்கூத்து கலைஞர், காமெடி கலந்த பேச்சு, உதவும் உள்ளம், அப்பாவிதனம் என நடிப்பால் மிரட்டியிருக்கிறார் கருணாஸ். குறிப்பாக, கிளைமாக்சில் அவரின் பாத்திரப்படைப்பு, அந்த குணம் மனதில் பதிகிறது. ஊர் பெரியவரின் உறவினர்கள், அவர்களின் டார்ச்சரில் சினிமாத்தனம் இருந்தாலும், பல குறைகள் இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும். இக்கட்டான சமயத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும் என்ற கருவுக்காக இந்த படக்குழுவை, இயக்குனரை பாராட்டலாம்.

சாலா (ரேட்டிங்3/5)

 மணிபால் இயக்கத்தில் தீரன், ரேஷ்மாவெங்கடேஷ், அருள்தாஸ் நடிப்பில் மதுவுக்கு எதிரான படம் சாலா. வட சென்னையில் பல பார்களை நடத்தும் அருள்தாஸ் ஆதரவாளராக இருக்கிறார் ஹீரோ தீரன். பார்வதி பார் என்ற ஒரு கடையை கைப்பற்றுவதில் அருள்தாசுக்கும், அவர் எதிரணிக்கும் இடையே மிகப்பெரிய மோதல். அதை யார் கைப்பற்றினார்கள். மதுவுக்கு எதிரான போராடும் ஹீரோயின் ரேஷ்மாவுக்கு என்ன ஆனது. கடைசியில் மது விஷயத்தில் மனம் திருந்தினாரா ஹீரோ என்பதை வடசென்னை பேக்கிரவுண்ட்டில் அடிதடி, மோதல், வெ ட்டு குத்து, அரசியல் கலந்து மசாலாவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.  கொஞ்சம் முரட்டுதனமான வேடத்தில் ஆக் ஷன் காட்சிகளில் ஓரளவு தீரன் நடிப்பு ஓகே. மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்துவது, தைரியமாக பார் நடத்துபவர்களுக்கு எதிரான பேசுவது போன்ற காட்சிகளில் ரே ஷ்மா கவர்கிறார். குறிப்பாக, அந்த கிளைமாக்ஸ் காட்சி, அவர் நடிப்பு உருக்கம். பல படங்களில் வில்லனா நடித்த அருள்தாசுக்கு இதில் நல்லதொரு வேடம். ஆரம்பம் முதல் கடைசிவரை  ஒரு ஆக் ஷன், மசாலா, பழிவாங்கல் படமாக சென்றாலும், கடைசி அரை மணி நேர காட்சிகள், அதில் இயக்குனர் சொல்லும் மெசேஜ் அருமை. குறிப்பாக, இன்றைய ‘பார்’ யுகத்தில் மது வேண்டாம் என்று சொல்லும் படக்கருவுக்கு, அந்த உருக்கமான, உணர்வு பூர்வமான காட்சிகளுக்கு பொக்கே. மற்றபடி வழக்கமான சினிமா.

பழிவாங்கல் பின்னணியில் ஆந்தாலஜி கதைபாணியில் உருவாகி உள்ளது அதர்மக்கதைகள். காமராஜ் வேல் இயக்கிய இந்த படத்தில் வெற்றி, சாக் ஷிஅகர்வால், அம்முஅபிராமி, திவ்யாதுரைசாமி, பூ ராமி உட்பட பலர் நடித்துள்ளனர். அதிகாரம் மிக்கவர்களின் தவறுகளுக்கு, சக்தியற்றவர்கள் எப்படி பதிலடி கொடுக்கிறார்கள் என்பது இந்த படக்கரு. சுக்ரன் சங்கர் இயக்கத்தில் சமூகவிரோதிகளை வேட்டையாடும் போலீஸ் கதை கடமை. 

**

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow