பேச முடியாத, பேய் பிடித்த பெண் ‘மீனா’ கொட்டுக்காளி குறி்த்து அன்னா பென்

கொட்டுக்காளி படத்தில் மதுரையை சேர்ந்த மீனா என்ற அடமன்ட் பெண்ணாக வருகிறேன். வாய் பேச முடியா கேரக்டர் மட்டுமல்ல, பேய் பிடித்த பெண்ணும் கூட. படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பாராட்டியது மறக்க முடியாது என்கிறார் அன்னா பென்.

Aug 8, 2024 - 11:42
Aug 8, 2024 - 12:45
 0
பேச முடியாத, பேய் பிடித்த பெண் ‘மீனா’  கொட்டுக்காளி குறி்த்து  அன்னா பென்
கொட்டுக்காரி அன்னாபென்

மலையாளத்தில் ‘ ஹெலன்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’ உட்பட பல படங்களில், தனது நடிப்பு திறமையால் பேசப்பட்டவர் அன்னா பென். சமீபத்தில் வெளியான கல்கி2896ஏடி படத்திலும் அமிதாப், கமல்ஹாசன், பிரபாஸ் இருந்தாலும் தனித்து தெரிந்தவர். இப்போது சிவகார்த்திகேயன் தயாரிக்க, கூழாங்கல்  பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் கொட்டுக்காளி படத்தில் ஹீரோயினாக தமிழில் என்ட்ரி ஆகியிருக்கிறார். இதில் சூரி கதை நாயகன். சென்னை வந்திருந்த அன்னா பென்னிடம் பேசினோம்.

‘‘இந்த பிறந்த நாளை என்னால் மறக்க முடியாது, சென்னையில் கொட்டுக்காளி டீமுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினோம். உண்மையை சொன்னால், கடந்த ஓராண்டாக வீட்டில் சும்மாதான் இருந்தேன். நல்ல படங்களுக்காக காத்திருந்தேன்.  நான் நடித்த கல்கி2898 ஏடி படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல், சமீபத்தில் பெரிய ஹிட்டான கருடன் பட ஹீரோ சூரியுடன் நடித்த இந்த  படம் இந்த மாதம் ரிலீஸ். என் காத்திருப்பு வீண் போகலை. இந்த ஆண்டை என்னால் மறக்க முடியாது’’. என்று நெ கிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் அன்னாபென்.

கே:கொட்டுக்காளி படத்துல நீங்க வாய் பேச முடியாத கேரக்டரில் வர்றீங்களாமே?

ஆமா, அது ஒரு வித்தியாசமான கே ரக்டர். பேய் பிடித்த பெண் கேரக்டரும் கூட. கதையை கேட்டவுடன் நடிக்க ஓகே சொன்னேன். என் அப்பா கதாசிரியர், தமிழில் விக்ரம் நடிப்பில் வந்த மஜா படத்துக்கு அப்பா பென்னிதான் மூலக்கதை எழுதியிருந்தார். அந்த வகையில் நல்ல கதைகளை நான் செலக்ட் செய்கிறேன். கொட்டுக்காளியில் மீனா என்ற மதுரை பெண்ணாக வருகிறேன். ஒரு டயலாக்  கூட பேசாமல் நடித்தது எனக்கும் வித்தியாசமான அனுபவம். நடிப்புக்கு வாய்ஸ் மட்டுமல்ல, கண், பார்வை, பாடிலாங்குவேஜ், உணர்வுகள் முக்கியம். அதை சிறப்பாக செய்து இருக்கிறேன்.  நான் பேசாவிட்டாலும் இயக்குனரிடம் நிறைய கேள்விகள் கேட்டு இந்த கேரக்டரி்ல நடித்தேன்.

கே:மதுரை படப்பிடிப்பு அனுபவம்


முதலில் மீனா கேரக்டருக்காக மேக்கப் போட்டு, ஹேர் ஸ்டைல் மாற்றி, மதுரைக்கார பெண்ணாக மாற்றினார்கள். அந்த கெட்டப்பை பார்த்தவுடன் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் ஆளே மாறியிருந்தேன்.  50 சதவீதம் ஜெயித்த பீலிங். அப்புறம், இயக்குனர் சொன்ன நடிப்பு, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கொடுத்த ஒத்துழைப்பு செம. லைவ் சவுண்டில் படப்பிடிப்பு நடத்தினோம். கொட்டுக்காளிங்கிற தலைப்புக்கு ஏற்பட அடமென்ட் கேர்ள் ஆக வருகிறேன்.

கே:காமெடியன் சூரி, இப்ப ஹீரோவாகிவிட்டாரே, அவருடன் நடித்தது பற்றி

விடுதலை பார்த்து மிரண்டேன். கருடனில்  இன்னமும் கலக்கியிருக்கிறார். இந்த படத்திலும் அவருக்கு வித்தியாசமான வேடம். அவர் கரகர குரலில் படம் முழுக்க பேசியிருக்கிறார். தொண்டை கட்டியது போன்ற அந்த வாய்ஸ்க்கு ரொம்பவே சிரமப்பட்டார். அந்த குரல் வர வேண்டும் என்பதற்காகவே நிறைய வைத்தியம் பார்த்தார். நடிப்பில் ரொம்ப கஷ்டம் காமெடி டிரை பண்ணுவதுதான். சூரி காமெடியில் இருந்து இப்ப இன்னொரு தளத்துக்கும் மாறியிருக்கிறார்.மலையாளத்தில் இப்படி மாறுவார்கள். தமிழிலும் அந்த மாற்றம் நடக்கிறது. மலையாள சினிமாவில் சூரி நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 

கே:தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படம் பார்த்தாரா?

தயாரிப்பாளராக அவர் எந்த குறையும் வைக்கவில்லை. எந்த பிரச்னையும் இல்லை. படம் பார்த்துவிட்டு மனதார பாராட்டினார். என் முதல் தமிழ்ப்படம் இப்படி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த படம் என்ன மெசேஜ் சொல்கிறது என்பதை நேரடியாக சொல்லமாட்டேன். படம்  பார்த்தால் நீங்களும் ஒரு விஷயத்தை, ஒரு உணர்வை பீல் பண்ணுவீர்கள். நம் வாழ்வுடன் பொருந்திய கதை இது.

கே: நிறைய வெளிநாட்டு திரைப்படவிழாவில்  கொட்டுக்காளி படம் கலந்துகொண்டதே

ஆம், நானும் பெர்லின், ருமேனியா திரைப்பட விழாவுக்கு சென்றேன். அங்குள்ள மக்களின் அன்பை, பாராட்டை உணர்ந்தேன். இப்படிப்பட்ட படங்கள், சினிமாவுக்கு கண்டிப்பாக தேவை. என் அப்பா இன்னமும் படம் பார்க்கவில்லை. அவர் கருத்துக்காக காத்திருக்கிறேன். ஓடிடி வளர்ந்த காலத்தில் மலையாளத்தில் நிறைய கதையம்சம் கொண்ட படங்கள் வந்தன. அதில் எனக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது, குறிப்பாக ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நான் நடித்தது லக்கிதான்.

கே: தமிழில் பேசும்படத்தில் கமல்ஹாசன், பிதாமகனில் விக்ரம், மொழியில் ஜோதிகா போன்ற ஒரு சிலரே, வாய் பேச முடியாத கே ரக்டரில் நடிச்சு இருக்காங்க. நீங்க நடித்தது பற்றி

எனக்கு உண்மையில் பெருமையாக இருக்கிறது.மலையாளத்தில் சரி,தமிழிலும் சரி அழுத்தமான கேரக்டர் கிடைப்பது மகிழ்ச்சி. அதேசமயம், கல்கி மாதிரியான கமர்ஷியல் படங்களிலும் இருக்கிறேன். இதைவிட ஒரு நடிகைக்கு என்ன வேண்டும். நாங்கள் ஸ்பாட்டுக்கு நடிக்க வருவதற்கு முன்பே அந்த ஏரியாவில் பல வாரங்கள் மற்ற நடிகர்களுக்கு ரிகர்சல் கொடுத்து வந்தார் இயக்குனர். போராட்டம், குடும்பம், சண்டை, பயணம் என பல விஷயங்களை கதை பேசுகிறது. 

கே: அடுத்து?

உண்மையை சொன்னால், எந்த புதுப்படமும் கமிட்டாகவில்லை. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். அது தப்பில்லையே’ என்று சிரிக்கிறார் அன்னாபென்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow