AR Murugadoss Net Worth : சூப்பர் ஸ்டார்களின் இயக்குநர்... AR முருகதாஸ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Director AR Murugadoss Net Worth 2024 : இயக்குநர் ஏஆர் முருகதாஸ், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏஆர் முருகதாஸின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 25, 2024 - 12:50
Sep 25, 2024 - 17:26
 0
AR Murugadoss Net Worth : சூப்பர் ஸ்டார்களின் இயக்குநர்... AR முருகதாஸ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
AR முருகதாஸ் சொத்து மதிப்பு

Director AR Murugadoss Net Worth 2024 : எஸ்ஜே சூர்யாவிடம் உதவியாளராக வேலை பார்த்த ஏஆர் முருகதாஸ், 2001ம் ஆண்டு வெளியான தீனா மூலம் இயக்குநராக அறிமுகமானார். அஜித், சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தீனா, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தீனாவில் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த ஏஆர் முருகதாஸ், அடுத்து விஜயகாந்த் நடிப்பில் ரமணா படத்தை இயக்கினார். எப்போதும் ஆக்ஷனில் மிரட்டும் கேப்டன் விஜயகாந்துக்கு, ரமணா கிளாஸிக்கல் ஹிட்டாக அமைந்தது. தீனா, ரமணா என அடுத்தடுத்து மாஸ் காட்டிய ஏஆர் முருகதாஸ், அடுத்து சூர்யாவின் கஜினி படத்தின் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். 

அதன்பின்னர் ஏஆர் முருகதாஸின்(AR Murugadoss)கரியரே வேற லெவலுக்குச் சென்றது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் என்ற படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ், அதன்மூலம் டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். அடுத்து கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த ஏஆர் முருகதாஸ், அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானுடன் இணைந்தார். இந்தியில் முதல் 100 கோடி வசூல் செய்தது ஏஆர் முருகதாஸின் கஜினி திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ், கதை திருட்டு சர்ச்சையிலும் சிக்கினார். 

ஏஆர் முருகதாஸ்(AR Murugadoss) இயக்கிய பெரும்பாலான படங்கள் கதை திருட்டு பஞ்சாயத்தில் சிக்கியது, இதனால் அவரது இமேஜ் ரொம்பவே டேமேஜ் ஆனது. இந்நிலையில், தற்போது ஒரேநேரத்தில் கோலிவுட், பாலிவுட் என இரண்டு பக்கமும் படங்கள் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23, இந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படங்களை இயக்குகிறார். விஜய்யின் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக நெல்சன் கமிட்டாக, அது பீஸ்ட் திரைப்படமாக உருவானது. அதன்பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஏஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயன், சல்மான் கான் என மெகா ஸ்டார்களுடன் கம்பேக் கொடுக்கவுள்ளார். 

இந்நிலையில், எஸ்கே 23 படத்துக்காக 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் ஏஆர் முருகதாஸ்(AR Murugadoss Salary), சல்மான் கானின் சிக்கந்தர் படத்துக்காக 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதன்படி, கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஏஆர் முருகதாஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஏஆர் முருகதாஸிடம் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான BMW X7 உட்பட மேலும் 2 சொகுசு கார்கள் உள்ளன. மேலும் ஏஆர் முருகதாஸுக்கு சொந்தமாக சென்னையில் சொந்த வீடு, பிளாட் ஆகியவையும் உள்ளன. இன்னொரு பக்கம் தனியாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் ஏஆர் முருகதாஸ், அதன் மூலம் பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார்.     

இந்த அப்டேட்களின் படி ஏஆர் முருகதாஸின்(AR Murugadoss Net Worth) மொத்த சொத்து மதிப்பு 130 முதல் 150 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. ஹீரோக்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் ஏஆர் முருகதாஸ், ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow