Yuvan Net Worth : ஜூனியர் மேஸ்ட்ரோ.. கிங் ஆஃப் BGM... யுவனின் சம்பளம், சொத்து மதிப்பு தெரியுமா?
Yuvan Shankar Raja Net Worth : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

Yuvan Shankar Raja Net Worth : சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் வாரிசு என்பதால் யுவனின் இசை மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அவரோ தனது அப்பாவை போல இல்லாமல் தனக்கென புதிய ஸ்டைலை உருவாக்கினார். பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக, தீனா, நந்தா, துள்ளுவதோ இளமை, மெளனம் பேசியதே என யுவனின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. மெலடி, ரொமான்ஸ், சோகம் உட்பட இளைஞர்களுக்கு வைப் கொடுக்கும் குத்து சாங் வரை யுவனின் இசை மரண மாஸ் ரகம் தான்.
அதேபோல், ஹீரோக்களுக்கு மாஸ் காட்டும் தீம் மியூசிக் கம்போஸ் செய்வதிலும் யுவனை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. இதற்கு பில்லா, மங்காத்தா படங்களின் தீம் இசையையே உதாரணமாக சொல்லலாம். பருத்தி வீரன் போன்ற படங்களில் கிராமத்து இசையிலும் தெறிக்கவிட்டார். சில ஆண்டுகளாக யுவனின் இசையில் பழைய வைப் இல்லை என ரசிகர்கள் புலம்பி வந்தனர். அவர்களுக்கு பிரதீப் ரங்கநாதனின் ’லவ் டுடே’ திரைப்படம் மூலம் மாமா குட்டியாக மாஜா செய்திருந்தார் யுவன். இதனையடுத்து தற்போது விஜய்யின் கோட் படத்திலும் தாறுமாறு சம்பவம் செய்ய காத்திருக்கிறார்.
விஜய்யின் கோட் படத்திற்கு இசையமைக்க யுவன் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை ஒரு படத்துக்கு 5 கோடி மூதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த யுவன், கோட் மூவியில் இருந்து சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், தனியாக ஆல்பங்களுக்கு இசையமைப்பது, படங்கள் தயாரிப்பதிலும் யுவன் எப்போதும் பிஸியாக உள்ளார். சென்னையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் யுவனுக்கு சொந்தமாக வீடு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுதவிர இரண்டு பிளாட்களும் யுவனுக்கு சொந்தமாக இருக்கிறதாம்.
அதேபோல், மினி கூப்பர் எஸ், பென்ஸ் GLE கிளாஸ், ஆஸ்டன் மார்ட்டின் வேன்குவிஸ் என சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளாராம். இந்த கார்களின் மதிப்பு மட்டுமே 3 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதன்படி யுவனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 130 முதல் 150 கோடி ரூபாய் வரை இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரையுலக பயணத்தில் 25 ஆண்டுகளை கடந்துவிட்ட யுவன், பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், யுவன் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்யின் கோட் படத்தில் இருந்து 4வது பாடல் வெளியாகிறது. பக்கா தர லோக்கல் பாடலாக உருவாகியுள்ள இது, யுவன் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை அனிருத் பாடியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், ரசிகர்களோ யுவனே அந்தப் பாடலை பாடியிருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.
What's Your Reaction?






