இடி மின்னலுடன் கனமழை இருக்கு.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்.. இந்திய வானிலை மையம் வார்னிங்

தமிழகத்திற்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 5, 2024 - 10:25
Jul 5, 2024 - 21:06
 0
இடி மின்னலுடன் கனமழை இருக்கு.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்.. இந்திய வானிலை மையம் வார்னிங்
Tamil Nadu Today Weather Report

தென்மேற்கு பருவமழை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடைந்து வருகிறது. கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கிய மழை சற்று ஓய்வு எடுத்துள்ளது. அதேநேரத்தில் வட மாநிலங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

அசாம் மாநிலத்தில் அதி கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அசாமில் இதுவரை கனம மற்றும் வெள்ளத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிகக் கனமழை தொடலும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்திற்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரகாண்ட், பீகார், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் திரிபுரா மற்றும் குஜராத் மாநிலங்களின் ஒரு சில பகுதிகளிலும் மிகக் கனமழை கொட்டும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம், பீகார், சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow