பட்ஜெட் எதிரொலி.. 2வது நாளாக தங்கம் விலை சரிவு.. நகை பிரியர்கள் ஹேப்பி

Gold Rate Today in Chennai : பட்ஜெட்டில் தங்கம்,வெள்ளி, பிளாட்டினம் நகைக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை இரண்டாவது நாளாக சரிவடைந்துள்ளது.

Jul 24, 2024 - 11:55
Jul 24, 2024 - 12:07
 0
பட்ஜெட் எதிரொலி.. 2வது நாளாக தங்கம் விலை சரிவு.. நகை பிரியர்கள் ஹேப்பி
Gold Rate Today in Chennai

Gold Rate Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.480 குறைந்து  ஒரு சவரன் ரூ.51,920-க்கும், ஒரு கிராம் ரூ.6,490ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  பட்ஜெட்டில் தங்கம்,வெள்ளி, பிளாட்டினம் நகைக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை சரிவடைந்து வருகிறது.

2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15%ல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல்  பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%ல் இருந்து 6.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் 54,600 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ. 6,825 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

பின்னர் நேற்று  காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து  ஒரு சவரன் தங்கம்  ரூ.54,480க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் ஒரு கிராம்  ரூ.6,810க்கு விற்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட பின்னர், நண்பகலுக்குப் பிறகு அதிரடியாக  தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. அதேபோல் கிராமுக்கு ரூ.260 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,550க்கும், ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்கப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் அதிரடியாக ரூ.3.10 குறைந்தது. அதன்படி  ஒரு கிராம் ரூ.92.50க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.480 குறைந்து  ஒரு சவரன் ரூ.51,920-க்கும், ஒரு கிராம் ரூ.6,490ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  பட்ஜெட்டில் தங்கம்,வெள்ளி, பிளாட்டினம் நகைக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் மற்றும் 
வெள்ளி நகைகளின் விலை அடுத்தடுத்து சரிவடைந்து வருகிறது.

தங்க நகைகளின் விலை சரிவு பற்றி பேசிய,தங்க நகை விற்பனையாளர் சங்கத்தினர், ‘‘ஒரு பக்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இதுவே இந்தியாவில் தங்கம் விலை குறைய முக்கிய காரணங்கள். இதுவரை 15 சதவீதமாக இருந்த தங்கம், வெள்ளி பொருட்களுக்கான வரி தற்போது 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்று நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow