Vijay Antony Net Worth: “படத்துல தான் பிச்சைக்காரன்... நிஜத்தில் பல கோடி சொத்து” HBD விஜய் ஆண்டனி!

Actor Vijay Antony Net Worth : இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என மாஸ் காட்டி வரும் விஜய் ஆண்டனி, இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Jul 24, 2024 - 11:30
Jul 24, 2024 - 12:05
 0
Vijay Antony Net Worth: “படத்துல தான் பிச்சைக்காரன்... நிஜத்தில் பல கோடி சொத்து” HBD விஜய் ஆண்டனி!
Actor Vijay Antony Net Worth

Actor Vijay Antony Net Worth : விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி(Vijay Antony). இப்படத்தில் விஜய்யும் கேமியோவாக நடித்திருந்தார். முதல் படத்தில் இருந்தே தான் கம்போஸ் செய்யும் பாடல்களில் வித்தியாசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஹிட் கொடுத்து மாஸ் காட்டினார். அதேபோல் விஜய் ஆண்டனியின் மெலடி பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. விஜய் ஆண்டனி இசையில் டிஷ்யூம், நான் அவனில்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வெடி, வேலாயுதம் போன்ற படங்களின் ஆல்பம் சூப்பர் ஹிட் அடித்தன.

ஒருகட்டத்தில் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் களமிறங்கினார் விஜய் ஆண்டனி. அதன்படி 2012ம் ஆண்டு வெளியான நான்(Vijay Antony Naan Movie) படத்தில் ஹீரோவாக என்ட்ரியான விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து சலீம், பிச்சைக்காரன் படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டினார். முக்கியமாக பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ரசிகர்களிடமும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்ததால் பக்கா ஹீரோ மெட்டீரியலாக அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி.

ஆனால், அதன்பின்னர் வெளியான விஜய் ஆண்டனியின் படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதேநேரம் பிச்சைக்காரன் 2ம் பாகத்தில் விஜய் ஆண்டனியே இயக்குநராகவும் அறிமுகமானார். தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன. இதனால் விஜய் ஆண்டனியை மியூசிக் ஸ்டூடியோவை விடவும், படப்பிடிப்புத் தளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

அதேபோல், ஹீரோவாக நடிக்கத் தொடங்கியது முதல், விஜய் ஆண்டனியின் சம்பளமும் கோடிகளில் உயர்ந்துள்ளது. அதன்படி விஜய் ஆண்டனி ஒரு படத்துக்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இசையமைப்பாளராக ஒரு படத்துக்கு 1 முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். இதுதவிர தயாரிப்பாளராகவும் கோடிகளை சம்பாதித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதனால் ஆண்டுக்கு 10 முதல் 15 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் விஜய் ஆண்டனி. 70 லட்சம் மதிப்புள்ள BMW உட்பட மேலும் சில சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார் அவர்.

மேலும், சென்னையில் 7 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பிரம்மாண்டமான வீடும், பெங்களூருவில் 5 கோடி மதிப்பிலான வீடும் விஜய் ஆண்டனிக்கு சொந்தமாக உள்ளதாம்(Vijay Antony Property). அதன்படி, விஜய் ஆண்டனியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு(Vijay Antony Net Worth) 60 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் தான் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன், என்றும் ரியலாகவே அவர் கோடீஸ்வரன் தான் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்தாண்டு விஜய் ஆண்டனியின் மகள்(Vijay Antony Daughter) தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் விஜய் ஆண்டனி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், ரொம்பவே உருக்கமாக இருக்கிறாராம்.    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow