ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலை கைது அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Aug 17, 2024 - 17:31
Aug 17, 2024 - 17:31
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் 23 பேரை கைது செய்தனர். அதில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.இவர் வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரனின் மகன்.

இந்த கொலை வழக்கில் தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போது அஸ்வத்தாமனுடனான தொடர்பு போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.

அஸ்வத்தாமனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு ஊராட்சி உள்ளது. இங்கு பிரபல தனியார் சோப்பு கம்பெனிக்கு சொந்தமான சுமார் 155 ஏக்கர் இடம் தொடர்பான விற்பனையில், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஒருவருக்கும் அஸ்வத்தாமனுக்கும் பிரச்சனை எழுந்துள்ளது.

அப்போது, அப்போது அஸ்வத்தாமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலையிட்டு 155 ஏக்கர் நிலத்தில் சுமார் 10 ஏக்கர் தங்களுக்கு தர வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்த பஞ்சாயத்து தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கிடம் சென்றதாக கூறப்படுகிறது. உடனே ஆம்ஸ்ட்ராங்கும் அஸ்வத்தாமனிடம் பேசியதாக தெரிகிறது. ஆனால் அப்போது ஆம்ஸ்ட்ராங்குடன் அஸ்வத்தாமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இது குறித்த பிரச்சினையை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்தையான ரவுடி நாகேந்திரனிடம் அஸ்வத்தாமன் கொண்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரில் தொழில் அதிபர் ஜெயப்பிரகாஷ் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் அஸ்வத்தாமனை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது தன்னை போலீசார் கைது செய்ய முக்கிய காரணம் ஆம்ஸ்ட்ராங் தான் என நினைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த ஆம்ஸ்ட்ராங்கே அஸ்வத்தாமனை ஜாமீனில்  வெளியே எடுத்து, கைதுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற விளக்கத்தையும் அளித்ததாக தெரிகிறது.

பிறகு சமாதானமாக செல்வதாக கூறி, பெரும் தொகை கைமாறியதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் முன்விரோத பகை புகைந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து பரோலில் ரவுடி நாகேந்திரன் கடந்த 4 மாதங்களுக்கு முன் வந்தபோது தற்போது கைது செய்யப்பட்டுள்ள அருள், பொன்னை பாலு உள்ளிட்டோர் சந்தித்து உதவி கோரியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அருள் மட்டும் 3 முறைக்கு மேல் அஸ்வத்தாமனை சந்தித்துள்ளான். பண உதவி செய்யவேண்டும் எனவும் கேட்டதாகவும், ரவுடி சம்போ செந்தில் மூலமாக இந்த கொலையை ஒருங்கிணைத்து, பண உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்களை வைத்து அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, நாகேந்திரனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. குறிப்பாக அஸ்வத்தாமன் வாங்கக்கூடிய மாமூல் இடங்கள், நிலத்தகராறு, கட்டப்பஞ்சாயத்து என அனைத்து தொழில்களிலும் ஆம்ஸ்ட்ராங் தலையிட்டதால், வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடியும், அஸ்வத்தாமனின் தந்தையுமான நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கின் கதையை முடிக்க உள்ளிருந்தே ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போலீஸ் காவல் முடிந்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகிய 2 பேரையும் செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அஸ்வர்த்தாமனுக்கு வரும் 21 தேதி வரையும், நாகேந்திரனுக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow