உயர்ந்தது மின் கட்டணம்... எவ்வளவு கட்டணம்? எப்போது முதல் அமல்படுத்தப்படும்?
2026 - 27 வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டுக்கான கட்டணம் 4.83% உயர்ந்துள்ள நிலையில், புதிய மின் கட்டணம் ஜூலை மாதல் அமலுக்கு வரும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின் வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, மின் நுகர்வு மற்றும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்து, கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த 2022ஆம் ஆண்டு மனுக்களை சமர்ப்பித்தது.
இந்த மனுக்கள் தொடர்பாக, சென்னை, கோவை, மதுரை ஆகிய ஊர்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது. இதையடுத்து, மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
மேலும், கடந்த ஆண்டு ஜூலையில் 2.18 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதோடு, 2026 - 27 வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
அதன்படி புதிய மின் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணத்தின் படி, ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு வசூலிக்க முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
புதிதாக நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டண விவரம் பின்வருமாறு:
வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட்டு பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு. ஏற்கனவே 4.60 காசு யுனிட் ஒன்றுக்கு பெற பட்டு வந்தது. தற்போது 4.80 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.
401 யுனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே 6.15 காசு பெறபட்டு வந்தது. தற்போது 6.45 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் வரையில் ஏற்கனவே 8.15 காசு பெறபட்டது. தற்போது 8.55 காசாக உயர்த்தபட்டுள்ளது. 601 முதல் 800 யூனிட் வரையில் ஏற்கனவே 9.20 காசு யூனிட்டுக்கு பெறப்பட்டது. தற்போது 9.65 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.
801 முதல் 1000 யூனிட் வரையில் முன்பு 10:20 காசு வசூலிக்கப்பட்டது. தற்போது 10:70 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட் க்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 11.25 காசு வாங்கபட்டு வந்தது. இனி 11.80 காசாக வசூலிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்க்கு 50 கி.வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 9.70 காசு, வாடகை ஒரு கிலோ வாட்டிற்க்கு 307 ரூபாய் வசூலிக்கபட்டு வந்தது. தற்போது யுனிட் ஒன்றுக்கு 10.15 காசு ஆக உயர்த்தியும், வாடகை ஒரு கிலோ வாட்டுக்கு 322 ஆக உயர்த்தபட்டுள்ளது.
112 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 562 ரூபாய் வாடகையாக வசூலிக்கபட்டு வந்தது. தற்போது 589 ரூபாயாக வசூலிக்கபட உள்ளது. புதிய மின் இணைப்பு வாங்குபவர்ககுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?