சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் – அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி
மாடு முட்டியதில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் சிறுமியை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

சாலையில் நடந்து சென்ற தாய், மகள் மீது பசுமாடு ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசக்கூடிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் பாலாஜி நகரில் தாய்- மகள் 2 பேரும் மளிகைக் கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது சாலையில கன்று குட்டியுடன் சென்று கொண்டிருந்த பசுமாடு ஒன்று, திடீரென்று ஆக்ரோஷமாக ஓடி வந்து சிறுமியை முட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதனை தடுக்க முயன்ற தாயை மாடு முட்டி தூக்கி வீசக்கூடிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ரோஷமாக முட்டிய மாடு
மேலும் அப்பகுதி மக்கள் மாட்டினை விரட்டியடித்து தாய், மகளை மீட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் சுற்றித்திரிந்த பசுவை பிடித்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.மாட்டின் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அருகம்பாக்கம் அருகே சாலையில் நடந்து சென்ற பள்ளி சிறுமியை மாடு முட்டியதில் சிறுமி படுகாயம் அடைந்தார். மேலும் திருவல்லிக்கேணி பகுதியிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதியவர் ஒருவரை மாடு முட்டியதில் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். மாடு முட்டி மனித உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Readm more: கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு- வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
What's Your Reaction?






