அரசியல்

ஒபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்திப்பு? – அதிமுகவில் மீண்டும் புதிய அணி

தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்திப்பு? – அதிமுகவில் மீண்டும் புதிய அணி

இபிஎஸ் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வரும் செங்கோட்டையன் இன்று ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more: விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் – வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்

அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவைக்கு தனியாக வருவதும் போவதுமாக இருந்த நிலையில், இன்று ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் அனைவரும் சுதந்திரமானவர்கள்

சட்டப்பேரவைக்கு வருகை தரும் செங்கோட்டையன் வழக்கமாக நான்காவது எண் நுழைவாயில் வழியாகவே வருவார்.ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மூன்றாம் எண் நுழைவு வாயில் வழியாக வந்து செல்லும் நிலையில், அதே வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read more:மானாவாரி நிலங்களில் கோடை உழவு: மானியத் தொகையினை அறிவித்தார் அமைச்சர்

முன்னதாக செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள். நான் அதிமுக-வில் தலைவன் அல்ல; ஒரு சாதாரன தொண்டன் மட்டுமே. அதிமுகவில் அனைவரும் சுதந்திரமானவர்கள், நாங்கள் வாரிசு அரசியல் செய்யக்கூடியவர்கள் அல்ல. எல்லா கட்சியிலும் சுதந்திரம் கொடுக்கவில்லை. அதிமுகவில் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கோட்டையன் எங்களுடன் இணைந்து பணியாற்றியவர் என தெரிவித்திருந்தார்.