நெரிசலில் சிக்கிய கர்ப்பிணி.. தோளில் சுமந்துசென்ற இளைஞர்கள்.. வான் சாகச நிகழ்ச்சியில் அவதி

சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Oct 6, 2024 - 23:39
Oct 7, 2024 - 14:21
 0
நெரிசலில் சிக்கிய கர்ப்பிணி.. தோளில் சுமந்துசென்ற இளைஞர்கள்.. வான் சாகச நிகழ்ச்சியில் அவதி

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி, மதியம் ஒரு மணிக்கு நிறைவுப்பெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

வான் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர். இதனால் மெரினா கடற்கரைக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையம் வந்த 3 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

நிகழ்ச்சியின் துவக்கமாக பாராசூட்டில் இருந்து குதித்து ஆகாய கங்கை குழு சாகசம் செய்தது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கமாண்டோக்கள் இறங்கி பணையை கைதிகளை மீட்பது குறித்து தத்ரூவமாக நடித்துக்காட்டினர்.

அதன்பின் விமானத்தில் இருந்து தேசிய கொடி மற்றும் ஆகாய கங்கை குழு கொடி வண்ணத்திலான பாராசூட் வீரர்கள் வானில் இருந்து தரையிறங்கினர். அதனைத் தொடர்ந்து விமானப்படையின் சேட்டக் ஹெலிகாப்டர்கள் திவாஜ் குழு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பிற்கு துவாஜ் என பெயரிடப்பட்டது. விமானப்படையின் 4 சேத்தக் ஹெலிகாப்டர்கள் தலைகீழ் ஒய் வடிவில் சாகசம் செய்தன.

"புயல்" குழுவின் ரபேல் விமானம் அதிவேகமாக சென்று மிரட்டியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 இலகு ரக தேஜஸ் விமானங்கள் வானில் அணிவகுத்தன. இந்த அணிவகுப்பிற்கு "கார்த்திக்கேயா" என பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து வானியல் சூழ்நிலைகளிலும் போர் செய்யும் திறன் மற்றும் தாக்கப்படுவதை எதிரிகள் உணர்வதற்கு முன்பாகவே தாக்குதலை நிகழ்த்தும் திறன்கொண்ட சுகோய்-30 எம்.கே.ஐ விமானங்கள் வானில் அணிவகுத்தன. இதற்கு "மெரினா" என பெயரிடப்பட்டது.

வானில் மூவர்ண புகையால் தேசியக் கொடியை உருவாக்கி சூர்யகிரண் வான் சாகச குழுவினர் வர்ணஜாலம் காட்டியதோடு, மிக நெருக்கமான தொலைவில் ஒன்றொரு ஒன்று மோதுவது போல் பறந்து பார்வையாளர்களை திகிலூட்டினர். மிக நெருக்கமான தூரத்தில் பறந்தும், இதயத்தின் வடிவில் புகையை கக்கியபடியும் பறந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளித்தனர்.

விமான சாகசத்தில் பங்கேற்ற விமானங்கள் வானில் பறந்தபடியே எரிபொருள் நிரப்பியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்ததனர். இந்நிலையில், உலகளவில் அதிக மக்கள் பார்வையிட்ட விமான சாகச நிகழ்ச்சியாக சென்னை மெரினாவில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சி அமைந்தது. உலகில் அதிக மக்கள் பார்வையிட்ட சாகச நிகழ்ச்சி என்ற பதிவுக்காக ஹெலிகாப்டர் மூலம் பார்வையாளர்கள் படம் பிடிக்கப்பட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமான சாகசத்தை கண்டு களிக்க பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதலே வர தொடங்கியதால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் வாகனங்களை நகர முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து சில ஏற்பட்டது 

இந்நிலையில் தற்போது விமான சாகசம் முடிந்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு ரயில் மட்டும் தங்களை சொந்த வாகனங்களுக்கு திரும்ப உள்ள நிலையில், மீண்டும் சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது. மேலும் சேப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

60 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் உள் நோயாளியாகவும், 9 பேர் நீர்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்தவரின் தகவல் மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் கர்பிணி பெண்ணை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் நகர முடியமல் தவித்தது. இதனையடுத்து, இளைஞர்கள் சிலர் ஆம்புலன்சில் இருந்து அந்த பெண்ணை ஸ்டெரச்சர் மூலம், நடந்தே தூக்கிச்சென்று கஸ்தூர பாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow