திமுகவினர் பயப்படக்கூடாது.. விஜய் கட்சி 6 மாதம்தான் தாக்கு பிடிக்கும்..சாபம் விட்ட தாமோ அன்பரசன்

விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அதனை திமுக அமைச்சர்கள்தான் அதிகம் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். விஜய் கட்சி 6 மாதம் கூட தாங்காது என்று கூறியுள்ளார் தாமோ அன்பரசன்.

Sep 11, 2024 - 17:21
 0
திமுகவினர் பயப்படக்கூடாது.. விஜய் கட்சி 6 மாதம்தான் தாக்கு பிடிக்கும்..சாபம் விட்ட தாமோ அன்பரசன்
tha mo anbarasan critisize vijay tvk party

யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது. என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான் என்றும் அமைச்சர் தா மோ அன்பரசன் கூறியுள்ளார். விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்கு பிடிக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விரைவில் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். எந்த தேதியில் மாநாடு நடத்துவது என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை குறித்து விஜய் அறிவிப்பார். கட்சி கொடியின் நிறங்கள் குறித்த விளக்கத்தையும் விஜய் கொடுப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் சென்னையை  அடுத்த மாடம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், “இன்று நடிகர் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே அரசியலுக்கு வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்னவென்று நாம் பார்த்துவிட்டோம். விஜய்காந்த் கட்சி ஆரம்பித்து இன்று என்ன ஆனா? அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். 

யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது. என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான். விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்கு பிடிக்கும். அதற்கு மேல் தாங்காது என்று கூறினார்.

சினிமாவுக்கு வருகிற கூட்டத்தை பார்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார். 6 மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற சினிமா பெட்டியை உள்ளே வைத்துவிடலாம்.தொடர்ந்து ஓடும் ஒதே கட்சி திமுகதான் என்றும் தாமோ அன்பரசன் கூறியுள்ளார். விஜய் கட்சி ஆரம்பித்த நாள் முதல் அதிகம் விமர்சிப்பது திமுகவினர்தான். அமைச்சர்கள் பலரும் தற்போது விஜய்க்கு எதிராக பேசத் தொடங்கி விட்டனர். இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தற்போது வரை தனது மவுனத்தால் பதில் சொல்லி வருகிறார் தவெக தலைவர் விஜய்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow