தவெக மாநாடு தள்ளிப்போகிறதா? விஜய் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிர்வாகிகள்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு தள்ளிப்போகும் எனவும், மாநாடு குறித்து தவெக தலைவர் விஜய் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sep 10, 2024 - 13:28
Sep 11, 2024 - 09:49
 0
தவெக மாநாடு தள்ளிப்போகிறதா? விஜய் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிர்வாகிகள்
vijay tvk manadu

விஜய் கட்சியின் முதல் மாநாடு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. தவெக மாநாடு நடத்த காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ள நிலையில் எப்போது நடைபெறும் என்று விஜய் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி 
மாநாடு நடைபெறும் என்று நிர்வாகிகள் காத்திருக்கும் நிலையில் விஜய் இன்னமும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது தள்ளிப்போக வாய்ப்புள்ளதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம், தவெக கட்சி கொடியையும், கட்சி பாடலையும் தலைவர் விஜய் அறிமுகப்படித்தினார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு இருக்கும் எனவும் தங்கள் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து முறையாக முதல் அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

விஜய்யின் மாநாடு எப்போது நடைபெறும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தவெக முதல் அரசியல் மாநாட்டை மதுரை, திருச்சி, ஈரோடு அல்லது சேலம் ஆகிய மாநகரங்களில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலையில் மாநாடு நடத்துவதற்கு கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் 33 நிபந்தனைகளுடன் விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தவெக கட்சி முதல் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி தவெக மாநாடு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறாது எனவும், தவெக முதல் மாநாடு தள்ளிவைக்கப்பட்டு அடுத்த மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே  தவெக மாநாடு குறித்து கட்சித் தலைவர் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன்  தனது வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.மாவட்ட வாரியாக மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் விவரங்களை சேகரிப்பது, மாநாட்டுக்கு வருவோருக்கு உணவு ஏற்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்டப்பேரவை தொகுதி வாரியாகதொண்டர்களை மாநாட்டுக்குஅழைத்து வருவதற்கு அமைக்கப்பட்ட பொறுப்பாளர்கள், குழுஉறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க நிர்வாகிகளை விஜய் கேட்டுக்கொண்டார்.கட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள், அதுதொடர்பான பணிகள் குறித்து மாவட்ட தலைவர்களுடன் விஜய் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தவெக மாநாட்டிற்கு காவல்துறையினர் தாமதமாக அனுமதி வழங்கியுள்ளனர். இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த குறுகிய நாட்களில் மாநாட்டிற்கு பந்தல் அமைப்பது தொடங்கி உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது வரைக்கும் உடனடியாக செய்ய முடியுமா என விஜய் நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதோடு மழைக்காலமாக இருப்பதால் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் சிரமத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. அதோடு மாநாடு ஏற்பாடுகளை செய்வதற்கு அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லை என்றும் எனவே தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வரும் 23ஆம் தேதி நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. தவெக மாநாடு தள்ளிப்போகும் எனவும், மாநாடு குறித்து தவெக தலைவர் விஜய் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருந்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்ட விஜய், மாநாட்டிற்கான அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow