தமிழ்நாட்டில் 11,000 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்பு..4 பேர் மரணம்..அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 11,000 மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Sep 3, 2024 - 12:29
Sep 4, 2024 - 10:10
 0
தமிழ்நாட்டில் 11,000 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்பு..4 பேர் மரணம்..அமைச்சர் மா.சுப்ரமணியன்
dengue case tamil nadu

தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. ஆனால் இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால், 67 பேர் இறந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால்  65 பேர் இறந்தனர். ஆனால் இந்தாண்டு இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு  டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் இறந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,உலக அளவில் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வருவதால், உலக பொதுசுகாதார துறை சார்பில் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைளையும், மேற்க்கொண்டுள்ளோம்.  குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க தீவிரமாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும்  பயணிகளை முழுமையாக சோதனை செய்யபடுகிறது. குறிப்பாக வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய விமான நிலையங்களில்  பரிசோதனை செய்து வருகிறோம் என்றார். மேலும் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனர் , மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவ மனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை  ஒரு நாளைக்கு சராசரியாக  58 லிருந்து 64 விமானங்கள் வருகிறது. இதுவரை 27,706 பேர்களுக்கு சோதனை செய்துள்ளோம்.  குறிப்பாக சென்னை விமான நிலையத்திற்கு  நாள் ஒன்றுக்கு 40 லிருந்து 45 வெளிநாட்டு விமானங்கள் வருகிறது.  இதில் சராசரியாக ஒரு நாளைக்கு 9000 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதேபோன்று திருச்சி விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள் வருகிறது. அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காய்ச்சல், குரங்கு அம்மை தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்களை பரிசோதனை செய்வதற்காக தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரபடுத்தி உள்ளோம். குறிப்பாக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் சென்னை போன்ற பெரு நகரங்களில் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மை நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 10 படுகைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற கட்டத்தில்  அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. ஆனால் இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால், 67 பேர் இறந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால்  65 பேர் இறந்தனர். ஆனால் இந்தாண்டு இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு  டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் இறந்துள்ளனர். 

இனி வரும் காலங்களில் மழை தொடர்ந்து அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளதால், காய்ச்சலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  ஆகையால் அவற்றை தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow